ஐசிசி உலக கோப்பையில் பயன்படுத்தப்படும் நவரச 9 குறியீடுகளின் அர்த்தம் என்ன தெரியுமா.. அசத்தலான தகவல்

icc trophy
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தி வரும் உலக கோப்பை 2023 தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் 1987, 1996, 2011 போன்ற வருடங்களில் இலங்கை, வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்தியா இத்தொடரை முதல் முறையாக முழுவதுமாக தங்களுடைய சொந்த மண்ணில் நடத்துவது சிறப்பம்சமாக இருந்து வருகிறது.

அதில் கத்துக்குட்டியாக கருதப்படும் நெதர்லாந்து வலுவான தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது இவரை நடைபெற்ற போட்டிகளில் மறக்க முடியாததாக அமைந்தது. அதே போல வலுவான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானை அசால்டாக தோற்கடித்த ஆப்கானிஸ்தான் தங்களுடைய தரத்தை காட்டியது. அதற்கு மத்தியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 5 போட்டிகளிலும் தொடர்ச்சியான 5 வெற்றிகளை பதிவு செய்து சொந்த மண்ணில் கில்லி என்பதை நிரூபித்து செமி ஃபைனல் வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது.

- Advertisement -

9 வித்தியாச குறியீடுகள்:
அப்படி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரில் கோப்பையை வைக்கும் மேசை முதல் மைதானங்களில் சுற்றியிருக்கும் பலகைகள் வரை 9 வித்தியாசமான குறியீடுகள் இருப்பதை ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். ஆனால் அதை தினந்தோறும் பார்த்தாலும் அது என்னவென்று தெரியாமல் ஏதோ ஒரு வகையான டிசைன் என்று நினைத்துக் கொண்டு ரசிகர்கள் போட்டியை பார்த்து வருகிறார்கள் என்றே சொல்லலாம்.

இருப்பினும் அந்த 9 குறியீடுகளும் ரசிகர்களின் 9 வெவ்வேறான உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் வகையில் ஐசிசி வடிவமைத்துள்ளதை பற்றி பார்ப்போம். இந்த 9 குறியீடுகளில் முதலாவதாக ஒரு புள்ளியை வைத்தார் போல் இருப்பது ரசிகர்களின் “மகிழ்ச்சியை” குறிப்பதாகும். அதைத்தொடர்ந்து 2வது குறியீடு உலகக் கோப்பை நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் ரசிகர்கள் எனும் “சக்தியை” குறிக்கும் வகையில் சூரியனை பிரதிபலிப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம்.

- Advertisement -

அதை தொடர்ந்து ரசிகர்களிலும் மதிப்பு கொடுத்து “வரவேற்கிறோம்” என்பதை உணர்த்தும் வகையில் கையெடுத்து கும்பிடுவது போன்ற குறியீடு 3வதாக இருக்கிறது. அதன் பின் ரசிகர்களாலேயே உலகக் கோப்பைக்கு “பெருமை” என்பதை 4வது குறியீடு உணர்த்துகிறது. 5வது குறியீடு “தைரியத்தை” காட்டும் வகையில் ஈட்டியின் நுனி மற்றும் 6வது குறியீடு “வெற்றியை” உணர்த்தும் வகையில் மின்னும் நட்சத்திரம் போன்ற வடிவமைப்பை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அடுத்த 4 மேட்ச்லயும் பாகிஸ்தான் தோற்கணும்.. அப்போ தான் அது நடக்கும்.. கம்ரான் அக்மல் அதிரடி பேட்டி

அதே போல 7வதாக இரவு நேரத்தில் வானத்தில் வெடிக்கும் பட்டாசு போன்ற குறியீட்டை பயன்படுத்தி “ஆச்சரியத்தையும்” 8வது குறியீடாக ரசிகர்களின் “ஆர்வத்தையும்” வடிவமைத்துள்ள ஐசிசி 9வதாக தோல்வியை சந்திக்கும் போது வெளிப்படும் “வேதனையை” குறிப்பிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரசிகர்களின் 9 வெவ்வேறு வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நவரச குறியீடாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement