அடுத்த 4 மேட்ச்லயும் பாகிஸ்தான் தோற்கணும்.. அப்போ தான் அது நடக்கும்.. கம்ரான் அக்மல் அதிரடி பேட்டி

Kamran Akmal
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தங்களின் முதல் 5 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பதிவு செய்து தடுமாறி வருகிறது. குறிப்பாக நெதர்லாந்து மற்றும் இலங்கையை எளிதாக தோற்கடித்து நல்ல துவக்கத்தை அந்த அணி இந்தியாவுக்கு எதிராக வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக உலக கோப்பையில் தோற்று அவமானத்தைச் சந்தித்தது.

அதிலிருந்து மீண்டெழுந்து வர வேண்டிய அந்த அணி மீண்டும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது பின்னடைவுக்குள்ளானது. அதை விட தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற போட்டியில் கத்துக்குட்டியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் சுமாராக செயல்பட்ட பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக தோல்வியை சந்தித்து மோசமான சாதனை படைத்தது.

- Advertisement -

எல்லாத்துலயும் தோற்கணும்:
அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் பாகிஸ்தான் செமி ஃபைனலுக்கு செல்வதற்கு எஞ்சிய 4 போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த 4 போட்டிகளிலும் பாகிஸ்தான் தொடர்ந்து தோல்வியை சந்திக்க வேண்டும் என்று முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் வேதனையுடன் விமர்சித்துள்ளார்.

ஏனெனில் மீண்டும் வெற்றிகளை பெற்றால் தற்போதுள்ள சுமாரான வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டு ஃபிட்னஸ் உட்பட எந்த அம்சத்திலும் பாகிஸ்தான் முன்னேறாது என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அவர் நேரலையில் பேசியது பின்வருமாறு. “அடுத்ததாக நடைபெறும் எந்த போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி பெறக் கூடாது. அப்போது தான் பாகிஸ்தான் அணி நன்றாக சீர்படுத்தப்படும்”

- Advertisement -

“ஒருவேளை வெற்றிகளைப் பெற்று ஃபார்முக்கு திரும்பினால் மீண்டும் அவர்கள் இதே வேலையை தான் செய்யட்டு துவங்குவார்கள்” என்று கூறினார். அப்போது தொலைக்காட்சி நிருபர் குறுக்கிட்டு பாகிஸ்தான் தோல்வியை சந்திக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவருக்கு பதிலளித்தார். ஆனாலும் அதை ஏற்றுக்கொள்ளாத கம்ரான் அக்மல் மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: 6 போட்டிகள் முன்னதாகவே மலிங்காவின் சாதனையை சமன் செய்த ஸ்டார்க் – முரளிதரன் மற்றும் மெக்ராத்தையும் முந்த வாய்ப்பு

“இது பாகிஸ்தான் தோல்வியை சந்திப்பது பற்றி கிடையாது. ஆனால் இப்படி நடந்தால் தான் அவர்களுடைய ஈகோ சிதைக்கப்படும்” என்று கூறினார். முன்னதாக பாபர் அசாம் கேப்டன்ஷிப் சுமாராக இருப்பதாகவும் கடந்த 2 வருடங்களாக பாகிஸ்தான் அணி வீரர்கள் ஃபிட்னஸ் சோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் வாசிம் அக்ரம், ரமீஸ் ராஜா போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் அடுக்கடுக்கான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள் அதனால் இந்த உலகக்கோப்பை முடிந்ததும் பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement