6 போட்டிகள் முன்னதாகவே மலிங்காவின் சாதனையை சமன் செய்த ஸ்டார்க் – முரளிதரன் மற்றும் மெக்ராத்தையும் முந்த வாய்ப்பு

Starc-and-Malinga
- Advertisement -

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய ஐசிசி-யின் 13-வது ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது பாதி லீக் போட்டிகளை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களில் பிடிக்கும் அணிகள் அரையிறுதி முன்னேறும் என்பதனால் தற்போது இந்த லீக் சுற்று போட்டிகளின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இடையேயான பலத்த போட்டி நிலவி வருகிறது.

தற்போது வரை இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்திருக்கின்றன. மேலும் இன்னும் சில அணிகளும் தங்களது முன்னேற்றத்திற்காக போராடி வரும் வேளையில் இந்த தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் நேற்று ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணி 309 வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி நல்ல ரன் ரேட்டுடன் இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் தங்களது அற்புதமான செயல்பாட்டினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்தே அற்புதமான செயல்பாட்டினை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக நேற்றைய போட்டியில் அவர் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி இருந்தாலும் அவர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் சில குறிப்பிடத்தக்க சாதனைகளை பதிவு செய்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் நேற்றைய போட்டியில் அவர் ஒரு விக்கெட் எடுத்ததன் மூலம் ஒருநாள் உலக கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்த லசித் மலிங்காவுடன் அந்த சாதனையை சமன் செய்துள்ளார். இதுவரை இலங்கை அணிக்காக 29 ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள மலிங்கா 56 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாவது இடத்தில் இருந்து வந்தார்.

இதையும் படிங்க : உலகக்கோப்பை வரலாற்றில் வாசிம் அக்ரமின் மிகப்பெரிய சாதனையை அசால்டாக சமன் செய்த – மிட்சல் ஸ்டார்க்

ஆனால் அதனை 6 போட்டிகளுக்கு முன்னதாகவே தற்போது 23-வது போட்டியிலேயே 56 விக்கெட்டுகளை கைப்பற்றி ஸ்டார்க் சமன் செய்துள்ளார். மேலும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் மெக்ராத் 71 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், முரளிதரன் 68 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் வேளையில் அவர்களையும் முந்தி செல்ல மிட்சல் ஸ்டார்க்-க்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலியா இந்த தொடரில் இன்னும் நான்கு லீக் போட்டிகளிலும், அதன் பிறகு நாக் அவுட் போட்டியிலும் விளையாடும் பட்சத்தில் ஸ்டார்க் அவர்களை கடக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement