உலகக்கோப்பை வரலாற்றில் வாசிம் அக்ரமின் மிகப்பெரிய சாதனையை அசால்டாக சமன் செய்த – மிட்சல் ஸ்டார்க்

Starc-and-Akram
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடரின் 24-வது லீக் போட்டியானது நேற்று ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது எளிதாக நெதர்லாந்து அணியை சுருட்டி 309 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 399 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக டேவிட் வார்னர் (104) மற்றும் மேக்ஸ்வெல் (106) ஆகியோர் சதம் அடித்து அசத்தினர்.

- Advertisement -

அதை தொடர்ந்து 400 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணியானது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 90 ரன்களிலேயே சுருண்டது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியானது 309 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் 4 ஓவர்களை மட்டுமே வீசி 22 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக நெதர்லாந்து அணியின் துவக்க வீரரான மேக்ஸ் ஓடவுட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான வாசிம் அக்ரமின் மாபெரும் சாதனையை எளிதாக சமன் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். அந்த வகையில் இதுவரை உலக கோப்பை போட்டிகளில் அதிக வீரர்களை போல்டு முறையில் ஆட்டமிழக்க வைத்த பவுலராக வாசிம் அக்ரம் முதலிடத்தில் இருந்து வந்தார்.

இதையும் படிங்க : ரொம்ப சந்தோசப்படாதீங்க.. அந்த வாய்ப்பு திடீர்னு காணாம போகலாம்.. இந்திய ரசிகர்களை எச்சரித்த தவான்

பாகிஸ்தான் அணிக்காக 38 உலக கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ள வசிம் அக்ரம் 25 வீரர்களை போல்டு முறையில் ஆட்டமிழக்க வைத்துள்ளார். ஆனால் நேற்றைய போட்டியில் ஸ்டார்க் தனது 23 உலகக்கோப்பை போட்டியிலேயே 25 வீரர்களை போல்டு முறையில் ஆட்டமிழக்க வைத்து அந்த சாதனையை சமம் செய்தார். உலகக் கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரரான ஸ்டார்க் மற்றும் பாகிஸ்தான் வீரரான வாசிம் அக்ரம் ஆகிய இருவர் மட்டுமே 25 வீரர்களை போல்டு முறையில் ஆட்டமிழக்க வைத்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement