146 பந்துகள் மீதம்.. உலக சாம்பியனை தெறிக்க விட்ட இலங்கை.. இங்கிலாந்தின் கதை முடிந்ததா?

SL vs ENg
Advertisement

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 26ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற 25வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. அதில் ஏற்கனவே 3 தோல்விகளை சந்தித்ததால் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு 45 ரன்கள் ஓபனிங் ஃபார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த டேவிட் மாலன் 28 ரன்களில் மேத்தியூஸ் வேகத்தில் அவுட்டாக அடுத்ததாக வந்த ஜோ ரூட் 3 ரன்னில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த ஜானி பேர்ஸ்டோ 30 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார்

- Advertisement -

இலங்கை வெற்றி:
அதை விட அடுத்ததாக வந்த கேப்டன் ஜோஸ் பட்லரை 8 ரன்களில் அவுட்டாக்கிய லகிரு குமாரா அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட லியம் லிவிங்ஸ்டனை 1 ரன்னில் காலி செய்தார். அதனால் திடீரென 85/5 என சரிந்த இங்கிலாந்தை காப்பாற்ற போராடிய மொயின் அலி 15 ரன்களிலும் பென் ஸ்டோக்ஸ் 43 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தனர். அடுத்து வந்த வீரர்களும் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 33.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து 156 ரன்களுக்கு சுருண்டது.

அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய இலங்கை சார்பில் அதிகபட்சமாக லஹிரு குமாரா 3 விக்கெட்டுகளும் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் கௌசன் ரஜிதா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 157 என்ற சுலபமான இலக்கை துரத்திய இலங்கைக்கு குஷால் பெரேராவை 4 ரன்னில் அவுட்டாக்கிய டேவிட் வில்லி அடுத்து வந்த கேப்டன் குஷால் மெண்டிசையும் 11 ரன்களில் பெவிலியன் அனுப்பி வைத்தார்.

- Advertisement -

அதனால் 23/2 என இலங்கை தடுமாற்ற துவக்கத்தை பெற்றாலும் அடுத்ததாக வந்த சமரவிக்ரமா மற்றொரு துவக்க வீரர் நிசாங்காவுடன் சேர்ந்து அதிரடியாக விளையாடி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். நேரம் செல்ல செல்ல இங்கிலாந்து மிகச் சிறப்பாக இந்த ஜோடி அரை சதமடித்து கடைசி வரை அவுட்டாகாமல் 25.4 ஓவரிலேயே இலங்கையை 160/2 ரன்கள் எடுக்க வைத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற வைத்தது.

இதையும் படிங்க: இப்போவும் சொல்றேன் பாகிஸ்தான் அதை செய்யும்.. இந்தியா உள்ளிட்ட எதிரணிகளை எச்சரித்த மிக்கி ஆர்த்தர்

அதில் நிசாங்கா 77* (83) ரன்களும் சமரவிக்ரமா 64* (53) ரன்களும் எடுத்து 146 பந்துகள் மீதம் வைத்து இலங்கைக்கு 2வது வெற்றியை பெற்றுக் கொடுத்து 5வது இடத்திற்கு முன்னேற உதவினர். மறுபுறம் 5 போட்டிகளில் 4வது தோல்வியை பதிவு செய்து 9வது இடத்துக்கு சரிந்த இங்கிலாந்தின் செமி ஃபைனல் வாய்ப்பு 90% முடிந்தது என்றே சொல்லலாம். குறிப்பாக அடுத்ததாக வலுவான இந்தியாவை எதிர்கொள்ளும் நிலையில் அடுத்த 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றாலும் மோசமான ரன்ரேட்டை கொண்டுள்ள அந்த அணி ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற இதர அணிகளின் தோல்வியை பார்க்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement