36 பந்தில் 125 ரன்ஸ்.. டெல்லியை வெறிகொண்டு அடித்த ஹெட் – அபிஷேக்.. சிஎஸ்கே’வை முந்தி ஹைதெராபாத் உலக சாதனை

SRh vs DC
- Advertisement -

ஐபிஎல் 20204 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 20ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தலைநகர் டெல்லியில் 35வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் ஷர்மா – டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினார்கள்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக முதல் ஓவரிலிருந்தே டெல்லி பவுலர்களுக்கு கருணை காட்டாமல் அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி வேகமாக ரன்கள் குவித்தது. குறிப்பாக இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா டெல்லி பவுலர்களை மனிதராக பார்க்காமல் வெறி கொண்ட வேங்கையாக அடித்து நொறுக்கினார். அதே போல மறுபுறம் தனது பங்கிற்கு பட்டைய கிளப்பிய ஹெட் 16 பந்துகளில் 50 ரன்கள் தொட்டார்.

- Advertisement -

ஹைதரபாத் உலக சாதனை:
அதனால் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக அரை சதமடித்த ஹைதராபாத் வீரர் என்ற அபிஷேக் சர்மாவின் சாதனையையும் அவர் சமன் செய்தார். அந்த வகையில் பட்டையை கிளப்பிய இந்த ஜோடியின் ஆட்டத்தால் முதல் 5 ஓவரிலேயே ஹைதராபாத் 100 ரன்கள் தொட்டது. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 100 ரன்கள் குவித்த அணி என்ற சென்னையின் சாதனையை உடைத்த ஹைதராபாத் புதிய வரலாறு படைத்தது.

இதற்கு முன் 2014ஆம் ஆண்டு பஞ்சாப்புக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் சென்னை அணி 6 ஓவரில் 100 ரன்கள் அடித்ததே  முந்தைய சாதனையாகும். அதே வேகத்தில் பட்டையை கிளப்பிய ஜோடியின் ஆட்டத்தால் பவர்பிளே முடிவில் ஹைதராபாத் 125/0 ரன்கள் குவித்தது. இதன் வாயிலாக ஐபிஎல் தொடரிலும் உலக அளவிலும் பவர் பிளேவில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற புதிய சரித்திர உலக சாதனையும் ஹைதராபாத் படைத்தது.

- Advertisement -

இந்தப் போட்டிக்கு முன் கடந்த 2017ஆம் ஆண்டு பெங்களூருவுக்கு எதிராக கொல்கத்தா 6 ஓவரின் முடிவில் 105/0 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் டெல்லி பவுலர்களை 6.2 ஓவரில் 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தெறிக்க விட்ட இந்த ஜோடியில் அபிஷேக் ஷர்மா 2 பவுண்டரி 6 சிக்ஸருடன் 46 (12) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க: சேப்பாக்கத்தில் தோனிக்கு நடப்பதை போன்று.. வேறுயெந்த வீரருக்கும் எங்கும் பார்த்ததில்லை – மிட்சல் ஸ்டார்க் ஓபன்டாக்

அதனால் அதிவேக அரை சதமடித்த வீரர் என்ற சாதனையை அவர் தவற விட்டார் என்றே சொல்லலாம். அதே போல அடுத்து வந்த ஐடன் மார்க்கம் ஒரு ரன்னில் அவுட்டாக மறுபுறம் மிரட்டலாக விளையாடிய டிராவிஸ் ஹெட்’டும் 89 (32) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது வந்த ஹென்றிச் கிளாசின் 15 ரன்னில் அவுட்டானதால் சற்று முன் வரை ஹைதராபாத் 10 ஓவர் முடிவில் 158/4 ரன்கள் எடுத்துள்ளது.

Advertisement