சேப்பாக்கத்தில் தோனிக்கு நடப்பதை போன்று.. வேறுயெந்த வீரருக்கும் எங்கும் பார்த்ததில்லை – மிட்சல் ஸ்டார்க் ஓபன்டாக்

Starc
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த 2019-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து ஐ.பி.எல் தொடர்களில் மட்டும் விளையாடி வரும் அவர் தற்போது நடைபெற்று வரும் 2024-ஆம் ஆண்டு ஐ பி எல் தொடர் வரை மிகச் சிறப்பாக விளையாடி வரும் தோனி தற்போது தனது கரியரின் கடைசி கட்டத்தில் நிற்கிறார்.

42 வயதான தோனி கடந்த ஆண்டே ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ரசிகர்கள் தன்மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் பாசத்திற்காக மேலும் ஒரு சீசன் விளையாடுவேன் என்று அறிவித்ததார்.

- Advertisement -

அதன் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். இருப்பினும் இதுவே அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் வேளையில் தோனி எங்கு சென்றாலும் அவர் களமிறங்கும் போது ரசிகர்களின் வரவேற்பு விண்ணை மட்டும் அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக சேப்பாக்கத்தில் உள்ள அனைவருமே “தோனி.. தோனி..” என அவரது பெயரை உரக்க கூறி வருகின்றனர். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் தோனிக்கு கிடைக்கும் இந்த வரவேற்பு குறித்து கூறுகையில் :

- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி பேட்டிங் செய்ய வந்தபோது ரசிகர்கள் அனைவரும் “தோனி.. தோனி..” என ஆர்ப்பரித்த சத்தம் என்னை வியப்படைய வைத்தது. மெல்போர்ன் மைதானத்தில் ஒரு லட்சம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும்போது கிடைக்காத சத்தம் சென்னை மைதானத்தில் கேட்டது.

இதையும் படிங்க : எங்களுக்கும் ஆசை தான்.. ஆனா நாங்களே நினைச்சாலும் தோனியை மேலே இறக்க முடியாது.. பிளெமிங் பேட்டி

30000 பேர் மொத்தமாக தோனியின் பெயரை எழுப்பும்போது அதிகளவு வரவேற்பு சத்தத்தை கேட்க முடிந்தது. இது மிகவும் வேடிக்கையாக ஒன்று. தோனிக்கு எந்த அளவு ரசிகர்கள் அன்பு வழங்குகின்றனர் என்பது இதன் மூலம் தெரிந்தது.. இது போன்ற ஒரு வரவேற்பை நான் பார்த்ததில்லை என மிட்சல் ஸ்டார்க் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement