எங்களுக்கும் ஆசை தான்.. ஆனா நாங்களே நினைச்சாலும் தோனியை மேலே இறக்க முடியாது.. பிளெமிங் பேட்டி

Stephen Fleming
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் 7 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பதிவு செய்தது. குறிப்பாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான போட்டியில் சென்னை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. முன்னதாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு இம்முறை சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த எம்எஸ் தோனி சாதாரண வீரராக விளையாடி வருகிறார்.

அதே காரணத்தால் பேட்டிங்கில் 8வது இடத்தில் களமிறங்கும் அவர் பேட்டிங் செய்வதை பார்ப்பதே அரிதாக மாறிவிட்டது. ஆனால் கடுகு சிறுத்தாலும் காரம் பெரியது என்பது போல் கடைசி நேரத்தில் பேட்டிங் செய்யும் தோனி இதுவரை டெல்லி, மும்பை, லக்னோவுக்கு எதிராக 37* (16), 20* (4), 28* (9) ரன்கள் விளாசி அற்புதமாக விளையாடி வருகிறார். எனவே சிஎஸ்கே அணியின் நலனுக்காக தோனி முன்கூட்டியே பேட்டிங் செய்ய களமிறங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் சில முன்னாள் வீரர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

- Advertisement -

எங்களுக்கும் ஆசை தான்:
இந்நிலையில் 42 வயதாகும் தோனி முழங்கால் வலியை கொண்டிருப்பதாக சிஎஸ்கே அணியின் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார். எனவே நாங்களே நினைத்தாலும் அவரை முன்கூட்டியே களமிறக்க முடியாது என்று பிளெமிங் தெளிவுபடுத்தியுள்ளார். ஒருவேளை அதிகமாக பேட்டிங் செய்தால் எஞ்சிய தொடரில் தோனி விளையாட முடியாத நிலைமை ஏற்படும் என்று அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“அவருடைய பேட்டிங் உத்வேகத்தை கொடுக்கிறதல்லவா? இந்த வருடம் வலைப்பயிற்சியில் கூட அவருடைய பேட்டிங் மிகவும் துல்லியமாக இருக்கிறது. எனவே அவருடைய ஆட்டத்தை பார்த்து எங்கள் அணி ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் ஆரம்பத்திலேயே நாங்கள் அவருடைய உச்சகட்ட திறமையை பார்த்துள்ளோம். இருப்பினும் சமீபத்திய வருடங்களில் அவருடைய முழங்காலில் பிரச்சனை இருக்கிறது”

- Advertisement -

“அதிலிருந்து மீண்டு வரும் அவரால் குறிப்பிட்ட சில பந்துகளை மட்டுமே எதிர்கொள்ள முடியும். இங்கே அனைவரும் எங்களைப் போலவே தோனி அதிக நேரம் பேட்டிங் செய்வதை பார்க்க விரும்புகின்றனர். இருப்பினும் நாங்கள் அவரை தொடர் முழுவதும் விளையாடுவதை பார்க்க விரும்புகிறோம். அதற்கு அவர் 2 – 3 ஓவர்கள் விளையாடுவதே சரியாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் பேட்டிங் செய்வதை பார்ப்பது அற்புதமாக இருக்கிறது”

இதையும் படிங்க: தல தோனியின் ஆட்டத்தை கணக்கிட முடியாமல் தவிக்கும் கால்குலேட்டர்.. வேற லெவல் புள்ளிவிவரத்தை கவனிச்சீங்களா

“அவர் பேட்டிங் செய்ய வரும் போது அற்புதமான சூழ்நிலை ஏற்படுகிறது. அவர் அனைவரையும் மகிழ்விக்கிறார். அந்த வகையில் தோனி சாதித்துள்ள விஷயங்களுக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்தியாவுக்காகவும் சிஎஸ்கே அணிக்காகவும் அவர் செய்துள்ளதை பார்த்து எங்களுக்கு ஆச்சரியமில்லை. எங்களுடைய அணியின் இதயத்துடிப்பாகவும் ஒரு அங்கமாகவும் அவர் இருப்பதற்காக நாங்கள் பெருமையடைகிறோம்” என்று கூறினார்.

Advertisement