தல தோனியின் ஆட்டத்தை கணக்கிட முடியாமல் தவிக்கும் கால்குலேட்டர்.. வேற லெவல் புள்ளிவிவரத்தை கவனிச்சீங்களா

MS Dhoni CSK
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் என்றே சொல்லலாம். சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் மிடில் ஆர்டரில் விளையாடி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த மகத்தான ஃபினிஷராகவும் போற்றப்படுகிறார்.

அதனால் 2019 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடும் அவருக்கு சென்னையை தாண்டி மும்பை, ஹைதராபாத் போன்ற அனைத்து நகரங்களிலும் ரசிகர்கள் உச்சகட்ட வரவேற்பை கொடுத்து வருகின்றனர். அந்த வரவேற்பு மத்தியில் டெல்லிக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய அவர் 36* (17) ரன்கள் அடித்து தம்முடைய தரத்தை காண்பித்தார்.

- Advertisement -

வேற லெவல் தோனி:
அப்போட்டியில் கடைசி ஓவரில் மட்டும் 20 ரன்கள் அடித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 20வது ஓவரில் 20 ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் படைத்தார். அதைத்தொடர்ந்து ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் 1* (2) ரன் எடுத்த தோனி கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியிலும் கடைசி நேரத்தில் களமிறங்கி 1* (3) ரன் எடுத்தார்.

அதன் பின் மும்பைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கடைசி 4 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஹாட்ரிக் சிக்சருடன் 20* ரன்கள் விளாசி அற்புதமான ஃபினிஷிங் கொடுத்தார். கடைசியில் அந்த 20 ரன்கள் வித்தியாசத்தில் தான் மும்பையை தோற்கடித்து சென்னை வென்றது. அதைத் தொடர்ந்து நேற்று லக்னோவுக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் வந்த தோனி மீண்டும் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 28* (9) ரன்கள் விளாசி தம்மை சிறந்த ஃபினிஷர் என்பதை மீண்டும் நிரூபித்தார்.

- Advertisement -

அந்த வகையில் இந்த சீசனில் 37*, 1*, 1*, 20*, 28* என 5 போட்டிகளில் களமிறங்கிய தோனி 87* ரன்களை 255.80 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்துள்ளார். ஆனால் அந்த 5 போட்டிகளில் அவர் ஒருமுறை கூட அவுட்டாகவில்லை. அதனால் 2024 ஐபிஎல் தொடரில் தோனியின் பேட்டிங் சராசரியை கால்குலேட்டரால் கணக்கிட முடியவில்லை. அதன் காரணமாக 2024 ஐபிஎல் தொடரில் தோனியின் பேட்டிங் சராசரி “முடிவற்றது” என்று காண்பிக்கும் கால்குலேட்டர் துல்லியமாக கணிக்க முடியாமல் தவிக்கிறது.

இதையும் படிங்க: மும்பை அணியின் பயிற்சியாளர் பொல்லார்ட்.. டிம் டேவிட்டுக்கு தண்டனை வழங்கிய ஐபிஎல் நிர்வாகம்.. காரணம் என்ன?

மொத்தத்தில் 42 வயதானாலும் ஸ்டைல் மாறாது என்பதற்கு சான்றாக தோனி செயல்பட்டு வருகிறார் என்றால் மிகையாகது. இந்த நிலையில் 7 போட்டிகளில் 3 தோல்விகளை பதிவு செய்துள்ள சென்னை அடுத்ததாக லக்னோ அணியை சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது. அதில் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் சென்னை களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement