287 ரன்ஸ்.. ஆர்சிபி’யை சரவெடியாக அடித்து நொறுக்கி சூறையாடிய ஹைதராபாத்.. 2 சரித்திர சாதனை

SRH 287
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 15ஆம் தேதி பெங்களூருவில் 30வது லீக் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கும் பெங்களூரு வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத்துக்கு டிராவிஸ் ஹெட் அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

அவருடன் சேர்ந்து எதிர்ப்புறம் அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடினார். அதனால் 8 ஓவரிலேயே 108 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஹைதராபாத்துக்கு அற்புதமான துவக்கத்தை கொடுத்த இந்த ஜோடியில் அபிஷேக் ஷர்மா 34 ரன்களில் ரீஸ் டாப்லி வேகத்தில் அவுட்டானார். ஆனால் எதிர்புறம் தொடர்ந்து மிரட்டிய டிராவிஸ் ஹெட் 20 பந்துகளில் அரை சதமடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

- Advertisement -

2 அதிரடி சாதனை:
அப்போது வந்த ஹென்றிச் க்ளாஸென் தம்முடைய பங்கிற்கு வெளுத்து வாங்கினார். ஆனால் எதிர்ப்புறம் தொடர்ந்து பெங்களூரு பவுலர்கள் மூச்சு வாங்க முடியாத அளவுக்கு சரமாரியாக அடித்து நொறுக்கிய டிராவிஸ் ஹெட் வெறும் 39 பந்துகளில் சதமடித்து 9 பவுண்டரி 8 சிக்சருடன் 102 (41) ரன்கள் விளாசி ஒரு வழியாக ஆட்டமிழந்தார்.

ஆனால் அப்போது நிம்மதியடைய முடியாத அளவுக்கு மறுபுறம் விளையாடிய ஹென்றிச் கிளாசின் தம்முடைய பங்கிற்கு ஆர்சிபி பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கினார். அதே வேகத்தில் பட்டையை கிளப்பிய 106 மீட்டர் மெகா சிக்ஸரை மைதானத்திற்கு வெளியே பறக்க விட்ட அவர் 23 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு 2 பவுண்டரி 7 சிக்ஸ்டருடன் 67 (31) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

கடைசியில் ஐடன் மார்க்கம் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக 32* (17) ரன்கள் எடுத்தார். அவருடன் கடைசி நேரத்தில் களமிறங்கி வான வேடிக்கை நிகழ்த்திய அப்துல் சமத் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 37 (17) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் 287/3 ரன்கள் குவித்த ஹைதராபாத் ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற தங்களுடைய சொந்தசாதனையை உடைத்து புதிய வரலாறு படைத்தது.

இதையும் படிங்க: அவரை தவிர்த்து டீம்ல ஒன்னுமே இல்ல.. மும்பை கோப்பை ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம்.. லாரா ஏமாற்ற பேட்டி

இதற்கு முன் மும்பைக்கு எதிராக நடந்த போட்டியில் அந்த அணி 277 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் 2 முறை 250 ரன்கள் அடித்த அணி என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையையும் ஹைதராபாத் படைத்துள்ளது. அந்த அளவுக்கு மோசமாக பந்து வீசி கேட்சுகளை கோட்டை விட்டு சொதப்பிய பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக லாக்கிங் பெர்குசன் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார்.

Advertisement