அவரை தவிர்த்து டீம்ல ஒன்னுமே இல்ல.. மும்பை கோப்பை ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம்.. லாரா ஏமாற்ற பேட்டி

Brian Lara 3
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரின் 2024 சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் இம்முறை 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. அதற்கு அந்த அணி ரசிகர்களே எதிர்ப்பு தெரிவிப்பது வேறு கதை.

ஆனால் பாண்டியா தலைமையில் முதல் 3 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த மும்பை அதற்கடுத்த 2 போட்டியில் வெற்றி கண்டது. அதனால் வெற்றிப் பாதைக்கு திரும்பி விட்டதாக கருதப்பட்ட அந்த அணி மீண்டும் பரம எதிரி சென்னைக்கு எதிரான 6வது போட்டியில் மீண்டும் தோல்வியை சந்தித்து புள்ளிப் பட்டியலில் 8வது இடத்திற்கு சரிந்துள்ளது.

- Advertisement -

லாரா ஏமாற்றம்:
இந்நிலையில் சென்னைக்கு எதிரான போட்டியில் வழக்கம் போல ஜஸ்பிரித் பும்ரா 6.8 என்ற குறைந்த எக்கனாமியில் பந்து வீசி அசத்தியதாக ஜாம்பவான் பிரைன் லாரா பாராட்டியுள்ளார். ஆனால் அவரை தவிர்த்து பவுலிங் துறையில் யாருமே சிறப்பாக செயல்படுவதில்லை என லாரா ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனவே இம்முறை மும்பை கோப்பையை வெல்வது கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“நாம் மும்பை இந்தியன்ஸ் அணியை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். இங்கே பலரும் அவர்களை கோப்பையை வெல்லக்கூடிய அணியாக வைத்திருக்கின்றனர். அதற்கான காரணம் என்னவெனில் அவர்கள் நன்றாக பேட்டிங் செய்கின்றனர். கடந்த 2 போட்டியில் 230 ரன்கள் அடித்த அவர்கள் 196 ரன்களை அதுவும் 15 ஓவரில் சேசிங் செய்து மிகவும் எளிதாக வென்றனர்”

- Advertisement -

“அதனால் இந்த போட்டியில் அவர்கள் வெல்வார்கள் என்று நாம் கணித்தோம். ஆனால் அவர்களுடைய பவுலிங் சுமாராக உள்ளது. ஜஸ்பிரித் பும்ராவை தவிர்த்து இந்த பவுலிங் கூட்டணியில் யாருமே அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. அதை சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் எடுத்துக்கொண்டனர். அந்த நேரத்தில் சில டாட் பந்துகளை வீசிய மும்பை போட்டியை அழுத்தும் என்று நாம் நினைத்தோம். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை”

இதையும் படிங்க: போனா போகட்டும்ன்னு தோனிக்கு மும்பை போட்டுக் கொடுத்தாங்க.. காரணம் இது தான்.. கவாஸ்கர் கருத்து

“ஹர்திக் பாண்டியாவுக்கு மோசமான போட்டியாக அமைந்தது. கடைசிக்கட்ட ஓவர்களில் பந்து வீசிய அவருக்கு எதிராக (தோனி) மாஸ்டர் 4 – 5 பந்துகளில் 3 சிக்ஸர்கள் அடித்தார். எனவே மும்பை வெற்றி பெறுவதற்கு 2 – 3 மேட்ச் வின்னிங் பவுலர்களை கண்டறிய வேண்டும்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து மும்பை தங்களுடைய அடுத்தப் போட்டியில் பஞ்சாப்பை ஏப்ரல் 18ஆம் தேதி எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement