8.3 ஓவரில் 150 ரன்ஸ்.. 300 ரன்ஸ் மிஸ்ஸானாலும் டெல்லியை நொறுக்கிய ஹைதராபாத்.. டி20 கிரிக்கெட்டில் 2 உலக சாதனை

Travis Head
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 20ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தலைநகர் டெல்லியில் 35வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத்துக்கு அபிஷேக் ஷர்மா – டிராவிஸ் ஹெட் ஆகியோர் முதல் பந்திலிருந்தே சரமாரியாக அடித்து நொறுக்கினார்கள்.

குறிப்பாக டெல்லி பவுலர்களுக்கு கருணை காட்டாமல் வெறித்தனமாக பேட்டிங் செய்த இந்த ஜோடியால் 5 ஓவரிலேயே ஹைதராபாத் 100 ரன்கள் கடந்தது. அதனால் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 100 ரன்கள் அடித்த அணி என்ற சென்னையின் சாதனையை உடைத்த ஹைதராபாத் புதிய சாதனை படைத்தது. இதற்கு முன் 2014 சீசனில் பஞ்சாப்புக்கு எதிராக சென்னை 6 ஓவரில் 100 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

ஹைதராபாத் சாதனை:
அதே வேகத்தில் விளையாடிய இந்த ஜோடியால் 6 ஓவரின் முடிவிலேயே ஹைதராபாத் 125/0 ரன்கள் அடித்தது. அதன் வாயிலாக ஒரு டி20 போட்டியில் பவர் பிளே முடிவில் அதிக ரன்கள் அடித்த அணியாக ஹைதராபாத் புதிய உலக சாதனை படைத்தது. அந்த வகையில் 6.2 ஓவரில் 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு ஹைதராபாத்துக்கு அற்புதமான துவக்கத்தை கொடுத்த இந்த ஜோடியில் அபிஷேக் ஷர்மா 2 பவுண்டரி 4 சிக்ஸருடன் 46 (12) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அப்போது வந்த ஐடன் மார்க்கம் ஒரு ரன்னில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் அசத்திய டிராவிஸ் ஹெட் 16 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு 11 பவுண்டரி 6 சிக்சருடன் 89 (32) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதற்கடுத்ததாக வந்த நட்சத்திர வீரர் ஹென்றிச் க்ளாஸென் 15 (8) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் 8.3 ஓவரில் 150 ரன்கள் தொட்ட ஹைதெராபாத் ஒரு டி20 போட்டியில் அதிவேகமாக 150 ரன்கள் அடித்த அணி என்ற உலக சாதனையும் படைத்தது.

- Advertisement -

அத்துடன் 10 ஓவரில் 158/4 ரன்கள் அடித்த ஹைதராபாத் ஐபிஎல் தொடரில் 10 ஓவரின் முடிவில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை படைத்தது. இதற்கு முன் இதே சீசனில் மும்பைக்கு எதிராக ஹைதராபாத் 148/2 ரன்களில் அடித்ததே முந்தைய சாதனையாகும். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்து வந்த நித்திஷ் ரெட்டி 37 (27), அப்துல் சமத் 13 (8) ரன்களுக்கு அவுட்டானார்கள்.

இதையும் படிங்க: அந்த 3 பேரும் ஊ’ன்னு சொல்லட்டும்.. இந்தியாவுக்காக 2024 டி20 உ.கோ ஜெயிச்சு கொடுக்க தயார்.. டிகே அறிவிப்பு

இறுதியில் அப்துல் சமத் அதிரடியாக 59* (29) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் ஹைதராபாத் 266/7 ரன்கள் அடித்தது. அதனால் ஒரு டி20 தொடரில் 3 முறை 250+ ரன்கள் (277, 287, 266) அடித்த அணி என்ற புதிய உலக சாதனையை ஹைதராபாத் படைத்துள்ளது. மறுபுறம் 300 ரன்களை அடிப்பதற்கான துவக்கத்தை பெற்ற ஹைதராபாத்தை கடைசியில் நன்றாக பந்து வீசி கட்டுப்படுத்திய டெல்லி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

Advertisement