அந்த 3 பேரும் ஊ’ன்னு சொல்லட்டும்.. இந்தியாவுக்காக 2024 டி20 உ.கோ ஜெயிச்சு கொடுக்க தயார்.. டிகே அறிவிப்பு

Dinesh Karthik
- Advertisement -

ஐபிஎல் 2024 தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடர் முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. அதில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய நல்ல ஃபார்மில் உள்ள வீரர்கள் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று நம்பப்படுகிறது.

அது போன்ற சூழ்நிலையில் விக்கெட் கீப்பராக விளையாட ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், இஷான் கிசான், கேஎல் ராகுல் போன்ற நிறைய வீரர்கள் போட்டியிட்டு வருகின்றனர். அதில் காயத்திலிருந்து குணமடைந்து டெல்லி அணிக்காக அசத்தி வரும் ரிஷப் பண்ட் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட பிரகாசமான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு மத்தியில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்தியாவுக்காக விளையாட போராடி வருகிறார்.

- Advertisement -

100% தயார்:
2019 உலகக் கோப்பையில் சுமாராக விளையாடியதால் கழற்றி விடப்பட்ட அவர் வர்ணனையாளராக மாறினார். அதனால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட 2022 சீசனில் பெங்களூரு அணியில் 330 ரன்களை 183 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கியதால் மீண்டும் இந்தியாவுக்காக தேர்வானார். ஆனால் மீண்டும் 2022 டி20 உலகக் கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தாத அவரை அத்தோடு இந்திய அணி நிர்வாகம் கழற்றி விட்டது.

அந்த சூழ்நிலையில் மீண்டும் தற்போதைய ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக மிரட்டும் தினேஷ் கார்த்திக் 7 போட்டிகளில் 226* ரன்களை 205.45 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வாங்கி வருகிறார். அதனால் இந்தியாவுக்காக அவர் உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படுவாரா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் ஆகியோர் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் இந்தியாவுக்காக விளையாடி 2024 உலகக் கோப்பையை வெல்ல 100% தயார் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய வாழ்க்கையின் இந்தப் பகுதியில் இந்தியாவுக்காக விளையாடினால் அது மகத்தான உணர்வாக இருக்கும். அதை செய்ய நான் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன். இந்தியாவுக்காக உலகக் கோப்பையில் விளையாடுவதை விட வாழ்க்கையில் வேறு எதுவும் பெரிதாக இருக்க முடியாது”

இதையும் படிங்க: 36 பந்தில் 125 ரன்ஸ்.. டெல்லியை வெறிகொண்டு அடித்த ஹெட் – அபிஷேக்.. சிஎஸ்கே’வை முந்தி ஹைதெராபாத் உலக சாதனை

“இந்திய அணிக்காக உலகக் கோப்பையில் சிறந்து விளங்க என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்க 3 பேர் உள்ளதாக நான் கருதுகிறேன். அவர்கள் ராகுல் டிராவிட், ரோஹித் சர்மா, அஜித் அகர்கர். அவர்கள் எடுக்கும் முடிவை நான் மதிக்கிறேன். ஆனால் தற்போது நான் 100% தயாராக இருக்கிறேன் என்பதை சொல்ல முடியும். என்னால் முடிந்த அனைத்தையும் அணிக்காக செய்ய முடியும்” என்று கூறினார்.

Advertisement