262 ரன்ஸ்.. 108மீ சிக்ஸர்.. போராடிய டிகே.. அடக்கிய ஹைதராபாத்.. மும்பையை முந்தி சாதனை படைத்தும் ஆர்சிபி தோல்வி

RCB vs RCB
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 15ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் 30வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹைதெராபாத்துக்கு டிராவிஸ் ஹெட் – அபிஷேக் ஷர்மா ஆகியோர் ஆரம்பத்திலேயே அடித்த நொறுக்கினார்கள்.

அந்த வகையில் 8 ஓவரிலேயே 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த இந்த ஜோடியில் அபிஷேக் சர்மா 34 (22) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது வந்த ஹென்றிச் கிளாசின் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடினார். அதே போல மறுபுறம் பட்டாசாக விளையாடிய டிராவிஸ் ஹெட் பெங்களூரு பவுலர்களை அடித்து நொறுக்கி 9 பவுண்டரி 8 சிக்ஸருடன் சதமடித்து 102 (41) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

போராடிய ஆர்சிபி:
அவரைத் தொடர்ந்து சரவெடியாக விளையாடிய கிளாசென் 2 பவுண்டரி 7 சிக்ஸருடன் 67 (31) ரன்கள் அடித்து நொறுக்கினார். இறுதியில் ஐடன் மார்க்ரம் 32* (17) அப்துல் சமத் 37* (10) ரன்கள் குவித்து மாஸ் ஃபினிஷிங் கொடுத்தனர். அதனால் 20 ஓவரில் 287/3 ரன்கள் எடுத்த ஹைதராபாத் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற தங்களுடைய சொந்த சாதனையை உடைத்து புதிய வரலாறு படைத்தது.

இதற்கு முன் இதே சீசனில் மும்பைக்கு எதிராக ஹைதராபாத் 277 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அந்தளவுக்கு மோசமாக பந்து வீசிய பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து 289 என்ற இமாலய இலக்கை துரத்திய பெங்களூருக்கு விராட் கோலி மற்றும் கேப்டன் டு பிளேஸிஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி 6.2 ஓவரில் 80 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ஆனால் அப்போது விராட் கோலி 42 (20) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்ற நிலையில் அடுத்ததாக வந்த வில் ஜேக்ஸ் 7, ரஜத் படிடார் 9 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் அதிரடியாக விளையாடிய கேப்டன் டு பிளேஸிஸை 62 (28) ரன்களில் அவுட்டாக்கிய கேப்டன் பட் கமின்ஸ் அடுத்ததாக வந்த சௌரவ் சௌகானை டக் அவுட்டாக்கினார்.

அதனால் பெங்களூருவின் வெற்றி கேள்விக்குறியான போது தனது அனுபவத்தை காண்பித்த தினேஷ் கார்த்திக் 5 பவுண்டரி 7 சிக்ஸருடன் அரை சதமடித்து 83 (35) ரன்கள் விளாசி போராடி ஆட்டமிழந்தார். குறிப்பாக 108 மீட்டர் சிக்ஸரை அடித்த தினேஷ் கார்த்திக் இந்த வருடம் மிகப்பெரிய சிக்சரை அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன் வெங்கடேஷ் ஐயர், நிக்கோலஸ் பூரான், ஹென்றிச் க்ளாஸென் தலா 106 மீட்டர் சிக்ஸர் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: காயத்தை பத்தி தோனி யோசிப்பதே கிடையாது.. அவரோட வேலை ஒன்னு மட்டும் தான் – எரிக் சிம்மன்ஸ் பேட்டி

இறுதியில் அனுஜ் ராவத் 25* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் பெங்களூருவை 262/7 ரன்களுக்கு கட்டுப்படுத்திய ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 3, மயங் மார்கண்டே 2 விக்கெட்டுகள் எடுத்தனர். மேலும் ஐபிஎல் தொடரில் சேசிங்கில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணி என்ற பெங்களூருவின் சாதனையை உடைத்தும் ஆர்சிபி பரிதமாக தோற்றது. இதற்கு முன் இதே சீசனில் இதே ஹைதராபாத்துக்கு எதிராக 277 ரன்களை சேசிங் செய்த மும்பை 246/5 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement