காயத்தை பத்தி தோனி யோசிப்பதே கிடையாது.. அவரோட வேலை ஒன்னு மட்டும் தான் – எரிக் சிம்மன்ஸ் பேட்டி

Simmons
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே ஏப்ரல் 14-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மிக முக்கியமான நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணியானது 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியின் போது கடைசி கட்டத்தில் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்களை அடித்தது மட்டுமின்றி 4 பந்துகளில் 20 ரன்கள் குவித்து சென்னை அணி 200 ரன்களை கடக்க உதவி செய்ததோடு வெற்றிக்கு தேவையான முக்கிய ரன்களையும் அடித்துக் கொடுத்தார்.

- Advertisement -

இதன் காரணமாக அவரது இந்த இன்னிங்ஸ் பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது. அதே வேளையில் இந்த போட்டியின் போது முழங்காலில் வலியை சந்தித்த தோனி தொடர்ச்சியாக விளையாடுவாரா? அல்லது காயத்தினால் அவருக்கு ஏதேனும் சிக்கல் ஏற்படுமா? என்பது குறித்த சந்தேகம் அனைவரது மத்தியிலும் உள்ளது.

இந்நிலையில் தோனி காயத்தை பற்றி எல்லாம் யோசிப்பதே இல்லை என்றும் அணியின் வெற்றி குறித்து மட்டுமே யோசித்து வருவதாக சென்னை அணியின் பௌலிங் கன்சல்டன்ட் எரிக் சிம்மன்ஸ் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

எங்களை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்குடனேயே மும்பை விளையாடியது. ஆனால் தோனி கடைசி ஓவரில் எல்லாவற்றையும் மாற்றிவிட்டார். அவர் ஒவ்வொரு முறையும் எங்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறார். களத்திற்கு சென்ற உடனே எடுத்த எடுப்பில் சிக்ஸ் அடிப்பதெல்லாம் சாதாரண விடயம் கிடையாது. நிச்சயமாக அதனால் அவருக்கு சில தொந்தரவுகள் இருந்திருக்கும்.

இதையும் படிங்க : அந்த ஏரியாவில் யுவராஜ் மாதிரி அடிக்கும் துபேவுக்கு 2024 டி20 உ.கோ சான்ஸ் கொடுங்க.. இர்பான் பதான் கோரிக்கை

ஆனால் அவர் அதைப் பற்றி எல்லாம் யோசிப்பது கிடையாது. அணிக்காக என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்வதில் உன்னிப்பாக உள்ளார். தோனியை போன்ற ஒரு வீரர் எதைப் பற்றியும் யோசிக்காமல் அடுத்தடுத்து என்ன என்று யோசித்து சென்று கொண்டிருப்பது ஆச்சரியம் அளிப்பதாக எரிக் சிம்மன்ஸ் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement