அந்த ஏரியாவில் யுவராஜ் மாதிரி அடிக்கும் துபேவுக்கு 2024 டி20 உ.கோ சான்ஸ் கொடுங்க.. இர்பான் பதான் கோரிக்கை

Irfan Pathan 7
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கைக்வாட் தலைமையில் விளையாடி வரும் நடப்பு சாம்பியன் சென்னை தங்களுடைய முதல் 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக தங்களுடைய 6வது போட்டியில் பரம எதிரி மும்பையை 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோற்கடித்தது. அந்தப் போட்டியில் சென்னை அணிக்காக சிவம் துபே மீண்டும் சிறப்பாக விளையாடி அசத்தினார்.

குறிப்பாக 4வது இடத்தில் களமிறங்கிய அவர் கேப்டன் ருதுராஜுடன் சேர்ந்து 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மும்பை பவுலர்களுக்கு மிடில் ஓவர்களில் சவாலை கொடுத்தார். அந்த வகையில் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய அவர் 10 பவுண்டரி 2 சிக்ஸருடன் 66* (38) ரன்கள் குவித்து சென்னையின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.

- Advertisement -

யுவராஜ் மாதிரி:
கடந்த வருடம் இதே போல விளையாடி சென்னை 5வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் இந்திய டி20 அணியில் கம்பேக் கொடுத்தார். அதே ஃபார்மில் இந்த வருடமும் அசத்துவதால் அவரை 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்ய வேண்டும் என்று வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங் போன்ற ஜாம்பவான்கள் சமீபத்தில் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் மிடில் ஓவர்களில் தற்சமயத்தில் மற்ற இந்திய வீரர்களை துபே அற்புதமாக விளையாடுவதாக இர்பான் பதான் கூறியுள்ளார்.

மேலும் யுவராஜ் சிங் போல மிடில் ஓவர்களில் 16 – 17 பந்துகளில் அரை சதமடிக்கும் திறமையை கொண்டுள்ள துபே டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “தற்போதைய இந்திய வீரர்களில் சிவம் துபேவின் அடிக்கும் திறமையை நான் மற்றவர்களிடம் பார்க்கவில்லை. குறிப்பாக மிடில் ஓவரில் விளையாடுவதற்கு துபே சிறந்தவர்”

- Advertisement -

“எனவே அவர் 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்வாகாமல் போனால் நான் ஏமாற்றமடைவேன். பல உலகக் கோப்பைகளில் யுவராஜ் சிங் போன்ற ஒருவரை நாம் தவற விட்டிருக்கிறோம். அவரால் 16 – 17 பந்துகளில் அரை சதமடிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியும். அவர் முதல் முதல் பந்திலிருந்தே அடிக்கக் கூடியவர். மறுபுறம் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியாக அடிக்கும் திறமை குறைந்து விட்டது”

இதையும் படிங்க: 9 போர்ஸ் 8 சிக்ஸ்.. 248 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆர்சிபி அணியை பிரித்து மேய்ந்த ஹெட்.. வார்னரை முந்தி மாஸ் சாதனை

“அதனாலயே சிவம் துபேவை தேர்ந்தெடுக்கலாம் என பலரும் பேசத் துவங்கியுள்ளனர். அந்த இருவருமே உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆனால் நான் சிவம் துபேவுக்காக ஆர்வமாக உள்ளேன்” என்று கூறினார். அப்படி வீரர்கள் ஆதரவு தெரிவித்து வருவதால் சிவம் துபே உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement