9 போர்ஸ் 8 சிக்ஸ்.. 248 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆர்சிபி அணியை பிரித்து மேய்ந்த ஹெட்.. வார்னரை முந்தி மாஸ் சாதனை

Travis Head 102
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 15ஆம் பெங்களூருவில் நடைபெற்ற 30வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. அதில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கும் பெங்களூரு வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆரம்பம் முதலே பெங்களூரு பவுலர்களை வெளுத்து வாங்கி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அந்த வகையில் 8 ஓவரிலேயே பட்டாசாக விளையாடிய இந்த ஜோடி108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது அபிஷேக் ஷர்மா 34 (22) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஹெட் சாதனை:
ஆனால் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 20 பந்தில் அரை சதமடித்தார். அதே வேகத்தில் தொடர்ந்து விளையாடிய அவர் 39 பந்துகளில் 100 ரன்கள் தொட்டு சதமடித்தார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஹைதராபாத் அணிக்காக அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற டேவிட் வார்னர் சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் கடந்த 2017ஆம் ஆண்டு கொல்கத்தாவுக்கு எதிராக ஹைதராபாத் அணிக்காக டேவிட் வார்னர் 43 பந்துகளில் சதமடித்ததே முன்பே சாதனையாகும். அந்த வகையில் ஆர்சிபி பவுலர்களை பந்தாடிய அவர் 9 பவுண்டரி 8 சிக்ஸருடன் 102 (41) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பெங்களூரு பவுலர்களை தம்முடைய பங்கிற்கு அதிரடியாக எதிர்கொண்ட தென்னாப்பிரிக்க வீரர் ஹென்றிச் க்ளாஸென் 2 பவுண்டரி 7 சிக்சருடன் 67 (31) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

கடைசியில் ஐடன் மார்க்கம் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக 32* (17) ரன்களும் அப்துல் சமத் 10 பவுண்டரி 4 சிக்ஸருடன் 37* (10) ரன்களும் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தனர். அதனால் 20 ஓவரில் 287/3 ரன்கள் குவித்த ஹைதராபாத் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற தங்களுடைய சொந்த சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தது.

இதையும் படிங்க: 287 ரன்ஸ்.. ஆர்சிபி’யை சரவெடியாக அடித்து நொறுக்கி சூறையாடிய ஹைதராபாத்.. 2 சரித்திர சாதனை

இதற்கு முன் இதே சீசனில் மும்பைக்கு எதிராக அந்த அணி 277 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அது போக ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற சாதனையையும் ஹைதராபாத் படைத்துள்ளது. இதற்கு முன் 2011ஆம் ஆண்டு தரம்சாலாவில் பெங்களூரு அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் 232/2 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement