18.3 ஓவரிலேயே 247.. பஞ்சாப்பை பதிலுக்கு ஓடவிட்ட ஹைதராபாத்.. சிஎஸ்கேவுக்கு நிகராக 2வது சேசிங் சாதனை வெற்றி

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 11ஆம் தேதி ஹைதராபாத் நகரில் 27வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி ஹைதராபாத்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் 20 ஓவரில் அபாரமாக விளையாடி 245-6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 82, பிரியான்ஸ் ஆர்யா 36, ஸ்டோய்னிஸ் 34* ரன்கள் அடித்தார்கள்.

ஹைதராபாத் அணிக்கு அதிகபட்சமாக ஹர்சல் படேல் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் அடித்து நொறுக்கினார்கள். குறிப்பாக அபிஷேக் ஷர்மா சில கேட்ச் வாய்ப்பை பஞ்சாப் தவற விட்டதற்காக வருந்தும் அளவுக்கு சாரமாரியாக அடித்து நொறுக்கினார்.

- Advertisement -

அபிஷேக் மிரட்டல்:

அவருடன் சேர்ந்து 13 ஓவரில் 171 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அபார துவக்கத்தைக் கொடுத்த ஹெட் அரை சதத்தை அடித்து 66 (37) ரன்னில் அவுட்டானார். ஆனால் இந்தப் பக்கம் எரிமலையாக வெடித்த அபிஷேக் ஷர்மா பஞ்சாப் பவுலர்களை புரட்டி எடுத்து 40 பந்துகளில் சதத்தை அடித்தார். அப்போதும் ஓயாமல் முரட்டுத்தனமாக அடித்த அவர் 14 பவுண்டரி 10 சிக்ஸருடன் 141 (55) ரன்கள் குவித்து அவுட்டானார்.

இறுதியில் க்ளாஸென் 21* (14) ரன்கள் எடுத்ததால் 18.3 ஓவரிலேயே 247-2 ரன்களை எடுத்த ஹைதராபாத் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற சாதனையையும் ஹைதராபாத் படைத்துள்ளது.

- Advertisement -

சாதனை சேசிங்:

இதற்கு முன் 2020ஆம் ஆண்டு சார்ஜாவில் இதே பஞ்சாப்புக்கு எதிராக ராஜஸ்தான், 2024இல் கொல்கத்தாவுக்கு எதிராக கொல்கத்தாவில் ராஜஸ்தான் தலா 224 ரன்களை சேசிங் செய்ததே முந்தைய சாதனை. இது போக ஐபிஎல் தொடரில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற சென்னையின் சாதனையையும் ஹைதராபாத் சமன் செய்துள்ளது.

இதையும் படிங்க: 245 ரன்ஸ்.. ஷமி மோசமான சாதனை.. ஹைதராபாத்துக்கு அதிரடியை காட்டிய பஞ்சாப் 2வது பெரிய சாதனை

இதுவரை பஞ்சாப் அணிக்கு எதிராக ஹைதராபாத் மைதானத்தில் ஹைதராபாத் 2015 முதல் இதுவரை தொடர்ந்து 8* வெற்றிகளை பெற்றுள்ளது. இதற்கு முன் 2010 – 2024 வரை பெங்களூருவுக்கு எதிராக சேப்பாக்கத்தில் சென்னையும் 8 வெற்றிகளை தொடர்ந்து பெற்றுள்ளது. இந்த மிரட்டல் வெற்றியால் 2வது வெற்றியைப் பெற்ற ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் சென்னை 10வது இடத்திற்கு தள்ளி எட்டாவது இடத்திற்கு முன்னேறியது.

Advertisement