20/3 என திணறிய பஞ்சாப்.. ஹைதெராபாத்துக்கு பயத்தை காட்டிய இளம் ஜோடி.. நூலிலையில் வெற்றி மாறியது எப்படி?

PBKS vs SRH 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஒன்பதாம் தேதி இரவு 7.30 மணிக்கு முல்லான்பூரில் 23வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத்துக்கு டிராவிஸ் ஹெட்டை 21 (15) ரன்களில் அவுட்டாக்கிய அர்ஷிதீப் சிங் அடுத்ததாக வந்த ஐடன் மார்க்ரமை டக் அவுட்டாக்கினார்.

அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த அபிஷேக் சர்மாவும் 16 (11) ரன்களில் ஆட்டமிழந்ததால் 39/3 என ஹைதராபாத் தடுமாறியது. அப்போது களமிறங்கிய இளம் வீரர் நித்திஷ் ரெட்டி அதிரடியாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் தடுமாறிய ராகுல் திரிபாதி 11 (14) ஹென்றிச் க்ளாஸின் 9 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

திரில்லர் வெற்றி:
இருப்பினும் எதிர்ப்புறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய நித்திஷ் ரெட்டி அரை சதமடித்து 4 பவுண்டரி 5 சிக்சருடன் 64 (32) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் அப்துல் ஷமத் அதிரடியாக 25 (12), சபாஷ் அகமது 14* (7) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் ஹைதராபாத் 182/9 ரன்கள் எடுத்து அசத்தியது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் 4, ஹர்ஷல் படேல் 2, சாம் கரண் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து 173 ரன்களை துரத்திய பஞ்சாப்புக்கு ஜானி பேர்ஸ்டோ ஆரம்பத்திலேயே கேப்டன் கமின்ஸ் வேகத்தில் டக் அவுட்டானார். அப்போது வந்த பிரப்சிம்ரன் சிங்கை 4 (6) ரன்களில் காலி செய்த புவனேஸ்வர் குமார் மறுபுறம் திணறிய கேப்டன் ஷிகர் தவானையும் 14 (16) ரன்களில் அவுட்டாக்கினார். அதனால் 20/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய பஞ்சாப்புக்கு மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாட முயற்சித்த சாம் கரண் 29 (22) ரன்களில் நடராஜன் வேகத்திலும் சிக்கந்தர் ராசா 28 (22) ரன்களில் உனட்கட் வேகத்திலும் நடையை கட்டினார்.

- Advertisement -

அப்போது ஜிதேஷ் சர்மாவும் 19 (11) ரன்களில் அவுட்டானதால் வெற்றி கேள்விக்குறியானது இருப்பினும். ஆனால் அந்த சமயத்தில் கடந்த போட்டியை போலவே சசாங் சிங் மற்றும் அசுடோஸ் சர்மா ஜோடி சேர்ந்து அதிரடியாக வெற்றிக்கு போராடியதால் பஞ்சாப்பின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்டது. உனட்கட் வீசிய அந்த ஓவரின் முதல் பந்திலேயே அசுடோஸ் சர்மா சிக்சரை பறக்க விட்டார்.

அதனால் பதறிய உனட்கட் 2 ஒய்ட்களை போட்ட நிலையில் மீண்டும் 2வது பந்தில் சிக்ஸரை தெறிக்கவிட்ட அசுடோஸ் சர்மா 3, 4வது பந்துகளில் 2 டபுள் ரன்கள் எடுத்தார். அப்போது மீண்டும் போட்ட உடன்கட் 5வது பந்தில் சிங்கிள் மட்டுமே கொடுத்தார். இறுதியில் கடைசி பந்தில் சசாங் சிக்ஸர் அடித்தும் 20 ஓவரில் 180/6 ரன்கள் எடுத்த பஞ்சாப் 2 ரன்கள் வித்தியாசத்தில் நூலிலையில் வெற்றியை கோட்டை விட்டது.

இதையும் படிங்க: 39/3 டூ 182 ரன்ஸ்.. மிரட்டிய அர்ஷிதீப்.. பஞ்சாப்பை பந்தாடிய நிதிஷ் ரெட்டி.. ஹைதரபாத் அணிக்காக அசத்தல் சாதனை

குறிப்பாக பஞ்சாப்பின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் கடைசியில் சசாங் சிங் 46* (25), அசுடோஸ் சர்மா 33* (15) ரன்கள் எடுத்துப் போராடிய போராட்டம் வீணானது மறுபுறம் போராடி வெற்றி கண்ட ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

Advertisement