KKR vs SRH : மீண்டும் அதிரடியாக போராடிய ரிங்கு சிங், ஆனாலும் முக்கிய தவறை செய்த கொல்கத்தா – ஹைதராபாத் வென்றது எப்படி

KKR vs SRH
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி கொல்கத்தாவில் இருக்கும் உலக புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 19வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு ஹரி ப்ரூக்குடன் இணைந்து 46 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்சிப் அமைத்தாலும் தடுமாற்றமாக செயல்பட்ட மயங் அகர்வாலை 9 ரன்களில் அவுட்டாக்கிய ஆண்ட்ரே ரசல் அடுத்து வந்த ராகுல் திரிபாதியையும் 9 (4) ரன்களில் காலி செய்தார்.

அந்த நிலைமையில் களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்கம் தனது பங்கிற்கு அதிரடியாக செயல்பட்டு 3வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 2 பவுண்டரி 5 சிக்சருடன் 50 (26) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து வந்த அபிஷேக் சர்மா தனது பங்கிற்கு 4வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 3 பவுண்டரி 2 சிக்சருடன் 32 (17) ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட ஹரி ப்ரூக் கடைசி வரை அவுட்டாகாமல் கொல்கத்தாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறி 12 பவுண்டரி 3 சிக்சருடன் தனது முதல் ஐபிஎல் சதத்தை அடித்து 100* (55) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

போராடிய ரிங்கு:
அவருடன் ஹென்றிச் க்ளாஸென் 16* (6) ரன்கள் எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் 228/4 ரன்கள் எடுக்க கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரசல் 3 விக்கெட் எடுத்தார். அதைத்தொடர்ந்து 229 என்ற கடினமான இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே ரஹ்மத்துல்லா குர்பாஸ் டக் அவுட்டானார். அடுத்ததாக வந்த வெங்கடேஷ் ஐயரை 10 (11) ரன்களில் அவுட்டாக்கிய மார்கோ யான்சென் அடுத்து வந்த சுனில் நரேனையும் கோல்டன் டக் அவுட்டாக்கினார்.

அதனால் 20/3 என்ற தடுமாற்றமான தொடக்கத்தை பெற்ற கொல்கத்தாவுக்கு அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் நித்திஷ் ராணா அதிரடியாக விளையாடினார். குறிப்பாக உமேஷ் யாதவ் வீசிய 6வது ஓவரில் 4, 6, 4, 4, 4, 6 என 28 ரன்களை தெறிக்க விட்ட அவருடன் 4வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய தமிழக வீரர் ஜெகதீசன் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 36 (21) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். அடுத்த ஓவரிலேயே நம்பிக்கை நட்சத்திரம் ஆண்ட்ரே ரசல் 3 (6) ரன்னில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்.

- Advertisement -

இருப்பினும் அடுத்ததாக கடந்த போட்டியில் 5 சிக்சர்களை பறக்க விட்டு மேஜிக் நிகழ்த்திய ரிங்கு சிங் கேப்டன் நித்திஷ் ராணாவுடன் இணைந்து அதிரடியாக விளையாட துவங்கினார். குறிப்பாக மிடில் ஓவரில் அதிரடியாக செயல்பட்ட இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு போராடிய போது 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 75 (41) ரன்கள் குவித்து அச்சுறுத்தலை கொடுத்த நித்திஷ் ராணாவை நடராஜன் அவுட்டாக்கினார். அந்த நிலைமையில் களமிறங்கிய சர்துல் தாக்கூர் 2 பவுண்டரிகளை பறக்க விட்டு அதிரடி காட்டியதால் கொல்கத்தாவுக்கு கடைசி 2 ஓவரில் 48 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி அரை சதமடித்தாலும் எதிர்ப்புறம் உம்ரான் மாலிக் வீசிய கடைசி ஓவரில் அதிரடி காட்ட முயற்சித்த சர்தூள் தாக்கூர் 2 பவுண்டரியுடன் 12 (7) ரன்களில் ஆட்டமிழந்தார். மேலும் உம்ரான் மாலிக் வேகத்தில் கடைசி 4 பந்துகளில் ரிங்கு சிங் 1 சிக்சர் மட்டுமே அடிக்க முடிந்தது.

- Advertisement -

அப்படி என்ன தான் ரிங்கு சிங் 4 பவுண்டரி 4 சிக்சருடன் 58* (31) ரன்கள் குவித்து போராடினாலும் 20 ஓவர்களில் கொல்கத்தா 205/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக மயங் மார்க்கண்டே மற்றும் மார்கோ யான்சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஹைதராபாத் தங்களுடைய 2வது வெற்றியை பதிவு செய்தது.

இதையும் படிங்க: இதெல்லாம் ஒரு அணியா? என்ன டீமை நீங்க அனுப்பி வச்சிருக்கீங்க? – அப்துல் ரசாக் காட்டம்

ஆனால் சொந்த ஊரில் பந்து வீச்சில் சுனில் நரேன் தவிர ஏனைய அனைத்து பவுலர்களும் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரிக்கு வழங்கிய கொல்கத்தாவுக்கு பேட்டிங்கில் ராணாவை தவிர எஞ்சிய வீரர்கள் சொதப்பி அழுத்தத்தை ஏற்படுத்தினர். அதனால் ஒருமுறை என்றால் பரவாயில்லை ஒவ்வொரு முறையும் எப்படி என்பது போல் ரிங்கு சிங் போராட்டமும் அந்த அன்னிக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

Advertisement