இதெல்லாம் ஒரு அணியா? என்ன டீமை நீங்க அனுப்பி வச்சிருக்கீங்க? – அப்துல் ரசாக் காட்டம்

Razzaq
- Advertisement -

பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது அந்நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதலாவது போட்டியானது இன்று லாகூர் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

PAK vs NZ

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் முன்னணி வீரர்கள் பலரும் இடம்பெறாதது பாகிஸ்தான் முன்னாள் வீரரான அப்துல் ரசாக் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் நியூசிலாந்து வீரர்கள் பெரும்பாலானோர் ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்று இருப்பதாலும் மீதமுள்ள வீரர்கள் காயம் அடைந்திருப்பதாலும் இரண்டாம் தர அணியே பாகிஸ்தான் வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அப்துல் ரசாக் கூறுகையில் :

NZ

நியூசிலாந்து அணி முழு அணியையும் அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் சில வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு சென்றுள்ளனர். சில வீரர்கள் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர். இப்படி ஏதோ ஒரு அணியை தயார் செய்து அனுப்பியுள்ளதால் அவர்களுக்கு அதிக ஆர்வம் இல்லாதது போல் தோன்றுகிறது.

- Advertisement -

நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரின் போது முழுமையான அணியாக இங்கு வந்திருந்தது. அதனால் அந்த தொடரும் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு அணியை தயார் செய்து அனுப்பி உள்ளீர்கள். ஒரு கிரிக்கெட் வீரரின் முன்னுரிமையாக தேசிய அணிக்காக விளையாட வேண்டியதாக தான் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : வீடியோ : என்னையா கலாய்ச்சீங்க, அதிரடியாக விளையாடி ஹைதராபாத் அணிக்காக தனித்துவ சாதனை படைத்த ஹரி ப்ரூக்

ஆனால் தேசிய அணியில் விளையாடாமல் வெளியில் சென்று வரும் வீரர்களுக்கு எப்படி அந்நாட்டு நிர்வாகம் தடையில்லா சான்றிதழை கொடுக்கிறது என தெரியவில்லை. நியூசிலாந்து அணி தற்போது முழு பலத்துடன் பாகிஸ்தானுக்கு வரவில்லை என்று அவர் காட்டமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement