4, 4, 6, 4, 6, 6.. ஒரே ஓவரில் 30 ரன்ஸ்.. இளம் வீரர் மாஸ் சாதனை.. டெல்லியை அடக்கிய நடராஜன்.. ஹைதெராபாத் வெற்றி

DC vs SRH
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 20ஆம் தேதி தலைநகர் டெல்லியில் 35வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் ஹைதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத்துக்கு டிராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மா ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வேகமாக ரன் குவித்தனர்.

அவர்களுடைய சரவெடியான ஆட்டத்தால் 6 ஓவரில் 125/0 ரன்கள் குவித்தாக ஹைதராபாத் டி20 கிரிக்கெட்டில் பவர் பிளேவில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற உலக சாதனை படைத்தது. அந்த வகையில் 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டிய இந்த ஜோடியில் அபிஷேக் ஷர்மா 46 (12) ரன்களில் அவுட்டானார். அப்போது வந்த ஐடன் மார்க்கம் 1 ரன்னில் அவுட்டானார்.

- Advertisement -

ஹைதெராபாத் வெற்றி:
அடுத்த சில ஓவரில் மறுபுறம் 16 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு அட்டகாசமாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 11 பவுண்டரி 6 சிக்ஸருடன் 89 (32) ரன்கள் குவித்து அவுட்டானார். அதற்கடுத்ததாக வந்த ஹென்றிச் க்ளாஸென் 15 (8), நிதிஷ் ரெடி 37 (27), அப்துல் 13 (8) ரன்களில் அவுட்டானார்கள். இருப்பினும் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய சபாஷ் அகமது அரை சதமடித்து 59* (29) ரன்கள் குவித்ததால் 20 ஓவரில் ஹைதராபாத் 266/7 ரன்கள் எடுத்தது.

மறுபுறம் 300 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹைதராபாத்தை ஓரளவு கட்டுப்படுத்திய டெல்லி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 267 என்ற கடினமான இலக்கை துரத்திய டெல்லிக்கு டேவிட் வார்னர் 1, பிரிதிவி ஷா 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் 3வது இடத்தில் விளையாடிய 22 வயது ஆஸ்திரேலிய வீரர் ஜேக் பிரேசர்-மெக்குர்க் 3வது ஓவரில் வாஷிங்டன் சுந்தருக்கு எதிராக 4, 4, 6, 4, 6, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளுடன் 30 ரன்கள் தெறிக்க விட்டார்.

- Advertisement -

அதே வேகத்தில் மிரட்டிய அவர் 15 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு ஐபிஎல் வரலாற்றில் டெல்லிக்காக அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற சாதனையும் படைத்தார். இதற்கு முன் 2016 சீசனில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அணிக்காக கிறிஸ் மோரிஸ் 17 பந்துகளில் அரை சதமடித்ததே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் அதிரடியாக விளையாடிய அவர் 5 பவுண்டரி 7 சிக்ஸருடன் 65 (18) ரன்கள் குவித்து அவுட்டானார்.

அடுத்ததாக வந்த அபிஷேக் போரேல் அதிரடியாக விளையாட முயற்சித்து 42 (22) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அதன் பின் ட்ரிஷன் ஸ்டப்ஸ் 10 ரன்களில் அவுட்டாகி ஏற்படுத்தினார்கள். அதை விட டெத் ஓவரில் லலித் யாதவ் 7, அக்சர் படேல் 6, அன்றிச் நோர்ட்ஜெ 0, குல்தீப் யாதவ் 0 ரன்களில் நடராஜன் அவுட்டாக்கி மிரட்டினார்.

இதையும் படிங்க: தோனி இளம்வீரர் போன்றவர்.. நாங்களா இருந்தா முடிவையே மாற்றி இருப்போம் – சி.எஸ்.கே வை கிண்டல் செய்த ஐஸ்லாந்து

அதனால் கடைசியில் கேப்டன் ரிசப் பண்ட் 44 (35) ரன்கள் எடுத்தும் டெல்லியை 19.1 ஓவரில் 199 ரன்களுக்கு சுருட்டியாக ஹைதராபாத் 67 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தமிழகத்தின் நடராஜன் 4, மயங்க் மார்க்கண்டே 2, நித்திஷ் ரெட்டி 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் சென்னையைப் பின்னுக்குத் தள்ளிய ஹைதராபாத் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியது.

Advertisement