தோனி இளம்வீரர் போன்றவர்.. நாங்களா இருந்தா முடிவையே மாற்றி இருப்போம் – சி.எஸ்.கே வை கிண்டல் செய்த ஐஸ்லாந்து

Dhoni
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பின் வரிசையில் களமிறங்கி விளையாடி வரும் முன்னாள் கேப்டனான எம்.எஸ் தோனி நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக கடைசியாக பின்வரிசையில் களமிறங்கும் அவர் 10 பந்துகளை மட்டுமே சந்திக்கும் வேளையில் 250-க்கும் மேல் விளையாடி தனது அசத்தலான ஆட்டத்தை இன்றளவும் தொடர்ந்து வருகிறார்.

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கடைசி நான்கு பந்துகளை சந்தித்த அவர் மூன்று சிக்சர் மற்றும் ஒரு இரண்டு ரன்கள் என 20 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவரது இந்த ஆட்டம் அந்த போட்டியின் போது சி.எஸ்.கே அணியின் வெற்றிக்கு பெருமளவில் உதவியது.

- Advertisement -

அதேபோன்று லக்னோ அணிக்கெதிராக நடைபெற்று முடிந்த கடைசி போட்டியிலும் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் இரண்டு பவுண்டிரி என மொத்தமாக 9 பந்தில் மூன்று பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 28 ரன்கள் குவித்து அசத்தினார்.

இப்படி தோனியின் அசத்தலான ஆட்டம் அதிரடியாக இருக்கும் வேளையில் அவரை முன்கூட்டியே களமிறக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனாலும் தோனி முன்கூட்டியே களமிறங்காமல் இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் இந்த செயல் குறித்து ட்வீட் செய்துள்ள ஐஸ்லாந்து கிரிக்கெட் போர்டு தோனியை முன் வரிசையில் களமிறக்குவதில் சென்னை அணி தோல்வியை சந்தித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது :

இதையும் படிங்க : 8.3 ஓவரில் 150 ரன்ஸ்.. 300 ரன்ஸ் மிஸ்ஸானாலும் டெல்லியை நொறுக்கிய ஹைதராபாத்.. டி20 கிரிக்கெட்டில் 2 உலக சாதனை

எம்.எஸ். தோனி எங்களது அணிக்காக விளையாடியிருந்தால் அவரைப் போன்ற வீரரை நாங்கள் எட்டாவது இடத்திற்கு முன்னதாகவே களம் இறக்குவோம். இளம் வீரர் போன்று இன்றளவும் அதிரடியாக ஆடும் அவரை சி.எஸ்.கே அணிக்கு சரியாக பயன்படுத்த தெரியவில்லை என கிண்டல் செய்யும் வகையில் ஐஸ்லாந்து வாரியம் ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement