வெறும் 10 லட்ச ரூபாய்க்கா நான் சூதாட போறேன் – தன்னுடைய தடை குறித்து மனம்திறந்த ஸ்ரீசாந்த்

Sreesanth
- Advertisement -

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய போது சூதாட்ட சர்ச்சையில் சிக்கி கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டார். அவரோடு சேர்ந்து மற்றும் இரண்டு வீரர்களும் தடை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த சூதாட்ட தடை சம்பந்தமாக மேல்முறையீடு செய்திருந்த ஸ்ரீசாந்த் கடந்த ஆண்டு தடை விலக்கு செய்யப்பட்டு மீண்டும் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்பட்டார்.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து அவர் கேரளா அணிக்காக சையது முஷ்டாக் அலி தொடரிலும் விளையாடினார். இந்நிலையில் தான் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் : 10 லட்ச ரூபாய்க்கு ஆசைப்பட்டு நான் ஏன் சூதாட்ட பிரச்சனையில் சிக்க போகிறேன். இந்தியாவுக்கு ஆட வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம். அதில் மட்டுமே தான் கவனமாக இருந்தேன் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்து பேசுகையில் : நான் ஒரு ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் கூட 4 பந்துகளில் 5 ரன்களை மட்டும் தான் விட்டுக் கொடுத்தேன். அந்த ஓவரில் ஒரு நோபால் போடவில்லை. வொயிடு போடவில்லை. அதேபோன்று ஒரே ஒரு பந்து கூட ஸ்லோவாக போடவில்லை. என்னுடைய காலில் ஏகப்பட்ட அறுவை சிகிச்சை செய்தும் நான் 130 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் தான் பந்து வீசினேன்.

Srisanth 1

அடுத்த தென் ஆப்பிரிக்க தொடரில் விளையாட வேண்டும் என்ற நினைப்பு மட்டும் தான் அப்போது எனக்கு இருந்தது. அதன் காரணமாக நான் இந்திய அணியில் மீண்டும் விளையாட வேண்டும் என்று மட்டும் தான் நினைத்தேன். சூதாட்டத்தில் என்னை தொடர்பு படுத்திக்கொள்ள என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை ? அதுவும் பத்து லட்ச ரூபாய்க்கு நான் சூதாட்ட பிரச்சனையில் சிக்க போகிறேன் ?

- Advertisement -

Sreesanth

ஒரு பார்ட்டிக்கு சென்றால் இரண்டு லட்ச ரூபாய் வரை செலவு செய்பவன் நான். எனவே நான் அது போன்ற ஒரு சூதாட்டத்தில் ஈடுபடவே இல்லை. பணம் என்னிடம் இருந்தால் நான் செலவு செய்துவிடுவேன் என்பதன் காரணமாக எங்கு சென்றாலும் என் கார்டு மூலம் தான் பணம் செலுத்துவேன். அதுமட்டுமின்றி பல பேருக்கு நான் உதவி செய்து இருக்கிறேன். நான் சூதாட்ட பிரச்சனையில் சிக்கியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என ஸ்ரீசாந்த் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : விராட் கோலி குறித்து யாரும் அப்படி எதும் சொல்லல – பி.சி.சி.ஐ நிர்வாகி அருண் துமால் அதிரடி

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த ஸ்ரீசாந்த் 2005ஆம் ஆண்டு அறிமுகமானது மட்டுமின்றி 2017ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடருக்கான அணியிலும் 2011 உலக கோப்பை அணிக்கான தொடரிலும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement