விராட் கோலி குறித்து யாரும் அப்படி எதும் சொல்லல – பி.சி.சி.ஐ நிர்வாகி அருண் துமால் அதிரடி

Dhumal
- Advertisement -

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து பல சர்ச்சையான விடயங்கள் அவர் குறித்து எழுந்து வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணியின் முன்னணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் பிசிசிஐ-யிடம் விராட் கோலி குறித்து புகார் அளித்ததாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது டெஸ்ட் வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் விராத் கோலியின் கேப்டன்சி குறித்து ஜெய் ஷாவிடம் தொடர்பு கொண்டு பேசியதாகவும் பல்வேறு கருத்துக்கள் சமூகவலை தளத்தில் கடந்த சில நாட்களாகவே உலா வருகின்றன.

kohli 1

- Advertisement -

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள பிசிசிஐ முக்கிய நிர்வாகி அருண் துமால் தனது கருத்தினை வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் இருந்து எந்த ஒரு வீரரும் வாய் வார்த்தையாக அல்லது கடிதத்தின் வாயிலாக அல்லது வேறு எந்த முறையிலோ கோலி குறித்து எந்த ஒரு குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை.

மேலும் கோலியின் கேப்டன்சி குறித்து யாரும் எதுவும் பேசவில்லை. இதுபோன்று செய்திகளை மீடியா எழுதுவது குழந்தைத்தனமாக உள்ளது. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுவது அவருடைய தனிப்பட்ட முடிவு அதனை அவர் நேரடியாக பி.சி.சி.ஐ-யிடம் தெரிவித்தார். இந்த கருத்தில் இருந்து விராட் கோலி மாறுபடவில்லை.

Ashwin

ஆனால் விராட் கோலி குறித்து இந்திய வீரர்களே புகார் அளித்துள்ளனர் என்பதெல்லாம் தவறான ஒரு செய்தி. இதுபோன்ற எந்த ஒரு நிகழ்வும் நடக்கவில்லை. பிசிசிஐ நிர்வாகம் ஒவ்வொரு முறையும் இந்திய அணி குறித்து வரும் செய்திகளுக்கு விளக்கம் அளிக்க முடியாது. எனவே மீடியா இதுபோன்ற தவறான செய்திகளை பரப்புவதை நிறுத்தவேண்டும். அதேபோன்று டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியும் மாற்றப்படும் என்று சில செய்திகளை பார்த்து வருகிறோம்.

IND 1

இது முற்றிலுமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று நாங்கள் அது போன்று எந்த ஒரு மாறுதலையும் செய்ய மாட்டோம் என்று அருண் துமால் வெளிப்படையாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார். மேலும் மீடியா இதுபோன்ற தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement