ஒருவேளை தோனி அவுட்டாகாம நாம ஜெயிச்சுருந்தா இப்படி சொல்லுவீங்களா.. கம்பீருக்கு ஸ்ரீசாந்த் பதிலடி

Sreesanth
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 5 போட்டிகளில் தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து செமி ஃபைனல் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. இந்த வெற்றிகளுக்கு களத்தில் நல்ல செயல்பாடுகளும் வெளிப்படுத்தும் தரமான வீரர்களை கண்டறிந்து தேர்வு செய்த தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரும் முக்கிய பங்காற்றுகிறார் என்பதில் சந்தேகமில்லை.

அந்த நிலைமையில் 2019 உலகக்கோப்பை அணியை தேர்வு செய்த எம்எஸ்கே பிரசாத் இந்திய வரலாற்றிலேயே மிகவும் மோசமான தேர்வு குழு தலைவர் என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கடந்த வாரம் அதிரடியாக விமர்சித்திருந்தார். குறிப்பாக 2018 காலகட்டங்களில் கிடைத்த வாய்ப்புகளில் அபாரமாக செயல்பட்டு இந்தியாவுக்காக 4வது இடத்தில் விளையாட முழு தகுதியுடன் காத்திருந்த ராயுடுவை முப்பரிமாண வீரர் தேவை என்ற கண்ணோட்டத்துடன் விஜய் சங்கருக்காக கழற்றிவிட்ட முடிவு மோசமானது என்றும் கம்பீர் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

ஸ்ரீசாந்த் பதிலடி:
இந்நிலையில் ஒருவேளை நியூசிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் தோனி ரன் அவுட்டாகாமல் இந்தியா ஃபைனலில் கோப்பையைக் வென்றிருந்தால் இப்படி சொல்வீர்களா என்று அவருக்கு ஸ்ரீசாந்த் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவருக்கும் வித்தியாசமான கருத்துக்கள் இருக்கின்றன. என்னை பொறுத்த வரை 2019 உலகக்கோப்பை அணி சிறப்பாகவே இருந்தது”

“அதில் தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களில் சிறந்த 11 பேர் விளையாடினார்கள். பொதுவாகவே அப்படி நடந்திருந்தால் இப்படி ஆகியிருந்தால் என்று பேசுவதில் அர்த்தமில்லை என்பதை நான் அறிவேன். ஆனாலும் அப்போட்டியில் தோனி ரன் அவுட்டாகாமல் நாம் உலகக்கோப்பையை வென்றிருந்தால் என்ன நடந்திருக்கும்? அப்போது கம்பீர் பாய் அவர்களே இது மிகவும் சிறந்த அணி என்று பாராட்டியிருந்திருப்பார்”

- Advertisement -

“என்னை கேட்டால் 2019 உலகக்கோப்பை அணி அந்த சமயத்தில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டிருந்தது. அதே போலவே 2011 – 2015 உலக கோப்பையிலும் தரமான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும் ராயுடுவை இந்தியா தவற விட்டதாக நான் கருதவில்லை. அவர் தன்னுடைய சிறந்த செயல்பாடுகளால் வாய்ப்புகளை பெற்றார். டி20 மற்றும் 50 ஓவர் போட்டிகள் வித்தியாசமானது. நீங்கள் டி20 கிரிக்கெட்டில் அசத்துவதால் ஒருநாள் போட்டிகளில் தேர்வு செய்யப்பட மாட்டீர்கள்”

இதையும் படிங்க: இங்கிலாந்து போட்டியில் அவரை ரெஸ்ட் பண்ணிட்டு அஷ்வினுக்கு சான்ஸ் கொடுங்க.. ஹர்பஜன் ஓப்பன்டாக்

“மாறாக முதல் தரம் மற்றும் இந்தியாவுக்காக விளையாடிய போட்டிகளில் வெளிப்படுத்திய செயல்பாடுகளை பார்க்க வேண்டும். குறிப்பாக உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ந்து அசத்தினால் மட்டுமே இந்தியாவுக்காக வாய்ப்பு கிடைக்கும். எனவே ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்திய செயல்பாடுகளை வைத்து இந்தியாவுக்காக ஒருநாள் உலக கோப்பையில் விளையாடுவது அசாத்தியமற்றதாகும்” என்று கூறினார்.

Advertisement