இங்கிலாந்து போட்டியில் அவரை ரெஸ்ட் பண்ணிட்டு அஷ்வினுக்கு சான்ஸ் கொடுங்க.. ஹர்பஜன் ஓப்பன்டாக்

- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் புள்ளி பட்டியலில் டாப் 4 இடங்களை பிடித்து செமி ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கு கடுமையான போட்டிகள் காணப்படுகின்றன. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் முதல் 5 போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று முதலிடம் பிடித்து செமி ஃபைனல் வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது.

குறிப்பாக வலுவான ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளை தோற்கடித்த இந்தியா மிகவும் எளிதாக ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தையும் வீழ்த்தியது. இதை தொடர்ந்து அக்டோபர் 29ஆம் தேதி லக்னோவில் இந்தியா தங்களுடைய 6வது போட்டியில் வலுவான நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

- Advertisement -

ஹர்பஜன் கோரிக்கை:
அந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுவாரா அல்லது தொடர்ந்து ஷமி மற்றும் சூரியகுமார் ஆகியோர் விளையாடுவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் லக்னோ மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் முகமது சிராஜுக்கு ஓய்வு கொடுத்து அஷ்வினை விளையாட வையுங்கள் என்று இந்திய அணி நிர்வாகத்தை ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏனெனில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தரமான சுழலை எதிர்கொள்வதற்கு தடுமாறுவார்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “குல்தீப் யாதவின் ஃபார்ம் நன்றாக இருக்கிறது. அடுத்த போட்டியில் குல்தீப், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய 3 ஸ்பின்னர்கள் விளையாடுவார்களா என்பதை நான் பார்க்க ஆச்சரியத்துடன் இருக்கிறேன். இங்கிலாந்து சுழலுக்கு எதிராக சிறப்பாக விளையாட மாட்டார்கள் என்பதால் இது சாத்தியமாகலாம்”

- Advertisement -

“ஏற்கனவே இங்கிலாந்து இந்த உலகக் கோப்பையில் நன்றாக விளையாடாத சூழ்நிலையில் பந்து சுழல துவங்கினால் அவர்களால் சிறப்பாக விளையாட முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. எனவே ஸ்பின்னர்கள் விளையாடுவது மோசமான தேர்வாக இருக்காது. அதற்காக நீங்கள் சிராஜுக்கு ஓய்வு கொடுக்கலாம். ஏனெனில் அடுத்தடுத்த போட்டியில் விளையாடும் அவரை விட ஷமி கடந்த போட்டியில் 5 விக்கெட்களை எடுத்து அசத்தினார்”

இதையும் படிங்க: உலகக்கோப்பை வரலாற்றில் வாசிம் அக்ரமின் மிகப்பெரிய சாதனையை அசால்டாக சமன் செய்த – மிட்சல் ஸ்டார்க்

“ஒருவேளை பிட்ச் சாதாரணமாக சுழலுக்கு சாதகமாக இல்லாமல் இருந்தால் இந்திய அணியில் நான் மாற்றங்களை பார்க்கப்போவதில்லை. நியூசிலாந்துக்கு எதிரான அதே அணி விளையாடலாம். இருப்பினும் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடும் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கலாம்” என்று கூறிய அவர் வெளியிட்ட தம்முடைய 11 பேர் அணி இதோ: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (கீப்பர்), சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா

Advertisement