தோனி ஒன்னும் தியாகம்’லாம் பண்ணல.. ஆனா அதையும் தாண்டி ஒன்னு செஞ்சாரு.. கெளதம் கம்பீர் கருத்துக்கு – ஸ்ரீசாந்த் பதில்

Sreesanth 2
- Advertisement -

நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி உலகிலேயே 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் விக்கெட் கீப்பராக புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அசத்திய அவர் உலகிலேயே அதிக ஸ்டம்ப்பிங் செய்தவராக உலக சாதனை படைத்து இளம் வீரர்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார்.

அதே போல மிடில் ஆர்டரில் பெரும்பாலான போட்டிகளில் நங்கூரமாக நின்று எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் சிறந்த ஃபினிஷராகவும் கொண்டாடப்படுகிறார். அது போக ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற தற்போதைய முக்கிய வீரர்கள் உருவாவதற்கு அப்போதே சீனியர்களை கழற்றி. விட்டு வாய்ப்பு கொடுத்து வளர்த்த அவர் இந்திய கிரிக்கெட்டின் வருங்காலத்தை சிறப்பாக கட்டமைத்து விடை பெற்றார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

ஸ்ரீசாந்த் பாராட்டு:
அந்த நிலையில் ஆரம்ப காலங்களில் டாப் ஆர்டரில் விளையாடிய தோனி கேப்டனாக பொறுப்பேற்றதும் அணியின் நலனுக்காக தம்முடைய இடத்தை இளம் வீரர்களுக்கு கொடுத்ததாக சமீபத்தில் கௌதம் கம்பீர் தெரிவித்தார். ஒருவேளை தொடர்ந்து டாப் ஆர்டரில் விளையாடியிருந்தால் இந்நேரம் சொந்த பெயரில் நிறைய சாதனைகள் படைத்திருப்பார் என்று தெரிவித்த அவர் இந்தியாவின் வெற்றிக்காகவும் உலகக் கோப்பைகளை வெல்வதற்காகவும் தோனி அதை தியாகம் செய்ததாக பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் தோனி தன்னுடைய இடத்தை தியாகமெல்லாம் செய்யவில்லை என்று கம்பீர் கருத்து பற்றி ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். ஆனால் அதையும் தாண்டி அணியின் நலனுக்காக வருங்காலத்தை கருத்தில் கொண்டு தோனி தம்முடைய இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “3வது இடத்தில் தொடர்ந்து விளையாடியிருந்தால் தோனி நிறைய சாதனைகள் படைத்திருப்பார் என்று கௌதம் பாய் சமீபத்தில் தெரிவித்தார்”

- Advertisement -

“இருப்பினும் தோனியை பொறுத்த வரை எப்போதுமே அதிக ரன்கள் எடுப்பதை விட அணியின் வெற்றியே முக்கியம் என்று நினைத்தார். மேலும் அணிக்காக தேவைப்படும் போது வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்யும் திறமையையும் பெற்றிருந்த அவர் இந்தியாவுக்கு உலக கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார். எனவே அதற்கான பாராட்டுக்கள் தோனிக்கு செல்ல வேண்டும். ஆனால் அதற்காக அவர் தம்முடைய பேட்டிங் இடத்தை தியாகமெல்லாம் செய்யவில்லை”

இதையும் படிங்க: கருத்து வேறுபாடு இருந்தது உண்மை.. ஆனா இந்திய அணியில் அந்த ட்ரெண்ட்டை தோனி தான் முதலில் கொண்டு வந்தாரு – ஸ்ரீசாந்த்

“மாறாக எந்த இடத்தில் எந்த மாதிரியான வீரர்கள் அசத்துவார்கள் என்பதை அவர் கண்டறிந்து அதற்கேற்றார் போல் வாய்ப்பு கொடுத்தார். பொதுவாக தம்முடைய வீரர்களின் சிறந்த செயல்பாடுகளை வெளிக்கொண்டு வருவதே அவருடைய கேப்டன்ஷிப் ஸ்டைலாக இருந்தது. அவர் எப்போதுமே இந்திய அணியை மட்டும் தான் முதலாவதாக நினைத்தார்” என்று கூறினார்.

Advertisement