கருத்து வேறுபாடு இருந்தது உண்மை.. ஆனா இந்திய அணியில் அந்த ட்ரெண்ட்டை தோனி தான் முதலில் கொண்டு வந்தாரு – ஸ்ரீசாந்த்

Sreesanth
- Advertisement -

சர்வதேச அரங்கில் 2007 – 2013 வரையிலான காலகட்டம் இந்திய கிரிக்கெட்டின் பொற்காலமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 2007 உலகக் கோப்பையில் படுதோல்வியை சந்தித்த பின் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத போதிலும் 2007 டி20 கோப்பையை வென்று கொடுத்த எம்எஸ் தோனி 2010இல் வரலாற்றில் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறி இந்தியா சாதனை படைப்பதற்கு முக்கிய பங்காற்றினர்.

அதை விட 2011இல் சௌரவ் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து சொந்த மண்ணில் 28 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த அவர் 2013 சாம்பியன்ஸ் டிராபியை தாம் உருவாக்கிய வீரர்களை வைத்து வென்று சரித்திரம் படைத்தார். மேலும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு 2012க்குப்பின் சேவாக், கம்பீர் போன்ற சீனியர்களை கழற்றி விட்ட அவர் விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் போன்ற தற்போதைய அணியில் முதுகெலும்பு வீரர்களாக இருப்பவர்களுக்கு அப்போதே வாய்ப்பு கொடுத்து வளர்த்தார்.

- Advertisement -

ஸ்ரீசாந்த் கருத்து:
அதன் காரணமாக ஹர்பஜன் சிங், கெளதம் கம்பீர் போன்ற சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இப்போதும் தோனி மீது வன்மமான கருத்துக்களை பேசி வருகின்றனர். இந்நிலையில் கப்பலில் பல வீரர்கள் கடினமாக உழைத்தாலும் அவர்களை சரியாக ஒருங்கிணைத்து குறித்த இடத்தில் கொண்டு சேர்க்கும் கேப்டன் அதிக பாராட்டுகளை பெறுவதற்கு தகுதியானவர் என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

மேலும் தோனியுடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இந்திய அணியில் வெற்றி கோப்பையை இளம் வீரர்களிடம் கொடுக்கும் ட்ரெண்டை முதலில் அவர் தான் கொண்டு வந்ததாக பாராட்டும் ஸ்ரீசாந்த் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “தோனியுடன் எனக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது. இருப்பினும் தற்போது கிரிக்கெட்டின் கோணத்தில் பார்த்தால் தோனி யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை என்று சொல்ல முடியாது”

- Advertisement -

“ஏனெனில் சில நேரங்களில் கேப்டன் வேறொரு கோணத்தில் சிந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் வரும். அது தான் வாழ்க்கையாகும். இருப்பினும் சிலர் வெற்றியில் நாங்களும் பங்காற்றிய போது ஏன் நீங்கள் 2 – 3 வீரர்களை மட்டும் பேசுகிறீர்கள் என்று சொல்கின்றனர். ஆனால் அணிக்காக தோனி வேறு வகையில் சிந்தித்தார். சொல்லப்போனால் அவர் தான் வெற்றி கோப்பையை அணியில் புதிதாக வந்தவருக்கு கொடுக்கும் முறையை முதலாவதாக கொண்டு வந்தார்”

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் 2 போட்டிகளில் ரோஹித் மற்றும் கோலி விளையாடாதது ஏன்? – டிராவிட் விளக்கம்

“ஏனெனில் அவர் எப்போதும் பாராட்டுகளை பெற விரும்புவதில்லை. ஆம் உலக கோப்பையை நீங்கள் பல வீரர்களின் முயற்சியால் தான் வென்றீர்கள். ஆனால் கப்பலில் பல வீரர்கள் இருந்தாலும் அதை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் பணி எப்போதும் கேப்டனால் செய்யப்படுகிறது. விமானத்தை நீங்கள் எவ்வளவு தான் தானியங்கி முறையில் போட்டாலும் அதை இயக்க கேப்டன் தேவை” என்று கூறினார்.

Advertisement