ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் 2 போட்டிகளில் ரோஹித் மற்றும் கோலி விளையாடாதது ஏன்? – டிராவிட் விளக்கம்

Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 22-ஆம் தேதி இன்று துவங்கி செப்டம்பர் 27-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. எதிர்வரும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற இருக்கும் இந்த தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.

இவ்வேளையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஹார்டிக் பாண்டியா, குல்தீப் யாதவ் போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு மூன்றாவது போட்டிக்கான அணியில் அவர்கள் அனைவரும் இணைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெறும் கடைசி தொடர் இது என்பதனால் இந்த தொடரில் இந்திய அணி வீரர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கப்போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடாதது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பி உள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில் : ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் விளையாட வேண்டிய மிக முக்கியமான வீரர்கள். எனவே அவர்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சரியான ஓய்வினை எடுக்க வேண்டும்.

- Advertisement -

அவர்கள் சமீபமாகவே அதிக அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி இருக்கின்றனர். எனவே இந்த ஓய்வு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் அவர்களை போன்ற சீனியர் வீரர்கள் ஓய்வு எடுக்கும் போது அந்த இடத்தில் வாய்ப்பின்றி அணியில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பினை அளிக்க முடியும்.

இதையும் படிங்க : இதுவரை ஆஸ்திரேலிய அணிக்கெதிராக ஜஸ்ப்ரீத் பும்ராவின் செயல்பாடு எவ்வாறு இருந்துள்ளது – ஓர் முழு அலசல் இதோ

அந்த வகையில் சூரியகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களுக்கு இது போன்ற போட்டிகளில் வாய்ப்புகளை வழங்க முடியும். இப்படி வாய்ப்புக்காக காத்திருக்கும் அவர்களது திறனையும் சோதிக்க இந்த முடிவுகள் சரியாக இருக்கும் இதெல்லாம் கணக்கில் கொண்டு தான் அவர்கள் இருவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டது என ராகுல் டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement