இதுவரை ஆஸ்திரேலிய அணிக்கெதிராக ஜஸ்ப்ரீத் பும்ராவின் செயல்பாடு எவ்வாறு இருந்துள்ளது – ஓர் முழு அலசல் இதோ

Bumrah
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கடந்த ஆண்டு ஏற்பட்ட காயத்திற்கு பிறகு பல்வேறு தொடர்களை தவற விட்டிருந்த வேளையில் அண்மையில் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரின் போது மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கம்பேக் கொடுத்தார். அப்படி கேப்டனாக அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றிருந்த பும்ரா இரண்டு டி20 போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். அந்த தொடரின் மூன்றாவது போட்டி மழையால் நடைபெறாமல் போனது.

அதனை தொடர்ந்து ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்த பும்ரா மூன்று போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறார்.

- Advertisement -

எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் முக்கிய வீரராக பார்க்கப்படும் பும்ரா தற்போது சரியான அளவில் போட்டிகளில் விளையாடி வருவதால் ரசிகர்கள் இடையேயும் அவரது செயல்பாடு மகிழ்ச்சியை அளித்து வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 22-ஆம் தேதி மொகாலியில் இன்று நடைபெறவுள்ள வேளையில் இதுவரை ஜஸ்ப்ரீத் பும்ரா ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக எவ்வாறு செயல்பட்டுள்ளார் என்பதை இந்த பதிவில் காணலாம்.

- Advertisement -

அதன்படி இதுவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 17 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 12 போட்டிகள் இந்திய மைதானத்திலும், 5 போட்டிகள் வெளி மைதானத்திலும் அவர் விளையாடி உள்ளார். இந்திய மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் 13 விக்கெட்டுகளையும், வெளி மைதானங்களில் ஒன்பது விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : விசாரணை தேவை… ஏதோ விஷயம் இருக்கு… கிரவுண்ட்ஸ் மேனுக்கு காச கொடுத்தாங்க… அர்ஜுனா ரணதுங்கா பரபரப்பு பேட்டி

இந்நிலையில் இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மேலும் அவர் சில விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அவரது ரெக்கார்டும் உயர வாய்ப்புள்ளது. அதோடு இந்த தொடரில் அவரது பந்துவீச்சு அற்புதமாக இருக்கும் பட்சத்தில் உலகக்கோப்பை தொடரிலும் அவர் அதே உத்வேகத்துடன் பயணிப்பார் என்பது உறுதி.

Advertisement