அடுத்த டார்கெட் 2024 டி20 உ.கோ.. தனது உத்தேச இந்திய அணியை தேர்வு செய்த ஸ்ரீசாந்த்

Sreesanth
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா ஆரம்பம் முதலே மிகச்சிறப்பாக விளையாடி 10 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றது. சொல்லப்போனால் காலம் காலமாக தோல்விகளை பரிசளித்து வரும் நியூசிலாந்தை முதல் முறையாக செமி ஃபைனலில் தோற்கடித்த இந்திய அணியில் அனைத்து வீரர்களும் அபாரமாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருந்தனர்.

அதன் காரணமாக 2011 போல கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெறும் 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 2013க்குப்பின் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களின் நாக் அவுட் சுற்றில் சந்தித்து வரும் அதே சொதப்பலை மீண்டும் அரங்கேற்றிய இந்தியா கோப்பையை நழுவ விட்டது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

- Advertisement -

அடுத்த டார்கெட்:
இதை தொடர்ந்து அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாட உள்ளது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூரியகுமார் யாதவ் தலைமையில் முழுவதுமாக இளம் வீரர்கள் களமிறங்க உள்ளனர்.

முன்னதாக 2022 டி20 உலகக்கோப்பை தோல்வியாலும் 35 வயதை கடந்து விட்டதாலும் ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோரை ஓரம்கட்டி ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய டி20 அணியை உருவாக்கும் வேலையை ஏற்கனவே பிசிசிஐ கடந்த வருடம் துவக்கியது. அதனால் அவர்களுக்கு 2024 டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் 2023 உலகக்கோப்பை தோல்விகளை கடந்த ஸ்ரீசாந்த் 2024 டி20 உலகக் கோப்பைக்கான தம்முடைய உத்தேச அடிப்படை அணியை தேர்வு செய்துள்ளார். ஜாம்பவான்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ரோஹித் விளையாடுவாரா இல்லையா என்பது பெரிய கேள்வி. இருப்பினும் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்ற அவர் அல்லது ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருப்பார்கள்”

இதையும் படிங்க: இந்தியாவின் தோல்வியை கொண்டாடிய இலங்கை ரசிகர்களுக்கு.. ஆப்பு வைத்த ஐசிசி.. வெளியான மற்றுமொரு அறிவிப்பு

“அதே போல ரிஷப் பண்ட் குணமடைந்து விட்டால் கண்டிப்பாக அவரைப் போன்ற மேட்ச் வின்னர் நமக்கு தேவை” என்று கூறினார். மேலும் 2024 ஐபிஎல் தொடரில் நிறைய வீரர்கள் அசத்துவார்கள் என்பதால் உலகக்கோப்பை அணியை தேர்வு செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் ஆவது கூறினார். ஸ்ரீசாந்த் 2024 டி20 உலகக் கோப்பை அடிப்படை அணி இதோ: ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ், இசான் கிசான், யசஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், முகமத் ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா முஹம்மது சிராஜ்

Advertisement