இந்தியாவின் தோல்வியை கொண்டாடிய இலங்கை ரசிகர்களுக்கு.. ஆப்பு வைத்த ஐசிசி.. வெளியான மற்றுமொரு அறிவிப்பு

- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா 6வது முறையாக கோப்பையை வென்றது. மறுபுறம் சொந்த மண்ணில் லீக் மற்றும் செமி ஃபைனல் சுற்றில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக எதிரணிகளை துவம்சம் செய்த இந்தியா 2011 போல கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

ஆனால் ஃபைனலில் பேட்டிங்கில் சுமாராக விளையாடிய இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்து கடந்த 2013க்குப்பின் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் செய்து வரும் அதே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்தது. அதனால் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் நெஞ்சங்கள் சுக்குநூறாக உடைந்த நிலையில் பாகிஸ்தான், இலங்கை போன்ற எதிரணி ரசிகர்கள் ஆஸ்திரேலியாவின் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.

- Advertisement -

ஐசிசி அறிவிப்பு:
அதில் ஒருபுறம் தென்னாபிரிக்கா உலகக் கோப்பைகளின் சோக்கர் என்றால் இந்தியா நாக் அவுட் போட்டிகளின் சோக்கர் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் தோல்வியை கொண்டாடுகின்றனர். மறுபுறம் 2023 ஆசிய கோப்பை ஃபைனலில் எங்களை 50 ரன்களுக்கும் 2023 உலகக்கோப்பையில் 55 ரன்களுக்கும் சுருட்டி அவமான தோல்வியை பரிசளித்த இந்தியா சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என்று இலங்கை ரசிகர்கள் தீபாவளிக்கு நிகரான கொண்டாட்டங்களை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இத்தனைக்கும் 50, 55க்கு இந்தியாவிடம் சுருண்டு சந்தித்த படு தோல்விகளை சந்தித்ததால் கடுப்பான இலங்கை அரசு தங்கள் நாட்டு வாரியத்தை கலைப்பதாக அறிவித்தது. மறுபுறம் வாரியத்தில் அடிப்படை விதிமுறைகளை தாண்டி அரசு தலையிட்டதால் சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை விளையாடுவதற்கு தற்காலிக தடை விதிப்பதாக ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்ததை மறந்து அந்நாட்டு ரசிகர்கள் இந்தியாவின் தோல்வியை கொண்டாடுவது வேறு கதை.

- Advertisement -

இந்நிலையில் வரும் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 24 வரை 2024 அண்டர்-19 உலகக்கோப்பை இலங்கைல நடைபெறும் என்று ஏற்கனவே ஐசிசி அறிவித்திருந்தது. ஆனால் தற்போது இலங்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அத்தொடரை அந்நாட்டிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு நகர்த்த ஐசிசி முடிவெடுத்துள்ளதாக கிரிக்பஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அதனால் அண்டர்-19 உலகக் கோப்பையை இலங்கையிலிருந்து மாற்றி தென்னாப்பிரிக்காவில் நடத்துவதற்கு ஐசிசி முடிவு எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

இதையும் படிங்க: இந்தியாவின் தோல்வியை கொண்டாடிய இலங்கை ரசிகர்களுக்கு.. ஆப்பு வைத்த ஐசிசி.. வெளியான மற்றுமொரு அறிவிப்பு

மேலும் தென்னாப்பிரிக்காவில் ஏற்கனவே வெளியிடப்பட்ட அதே தேதிகளில் இந்த உலகக் கோப்பை நடைபெறும் என்றும் தெரிய வந்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே அதள பாதாளத்தில் திண்டாடும் இலங்கை கிரிக்கெட்டுக்கு ஐசிசியின் இந்த முடிவு மற்றுமொரு ஆப்பு போல் அமைந்துள்ளது. இருப்பினும் சர்வதேச தொடர்களில் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் விளையாடுவதற்கு இலங்கைக்கு ஐசிசி அனுமதி கொடுத்துள்ளது ஆறுதல் செய்தியாகும்.

Advertisement