
வரலாற்றில் சிறந்து விளங்கிய வீரர்களைக் கொண்டு கனவு 11 பேர் கொண்ட அணியை முன்னாள் இந்நாள் வீரர்கள் தேர்ந்தெடுப்பது வழக்கமாகும். ஆனால் தற்போது முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் ஒரு புதுமையான கனவு அணியை தேர்ந்தெடுத்துள்ளார். அதாவது திறமை மட்டுமின்றி களத்தில் எதிரணியினருடன் சண்டை போட்டு ஆக்ரோஷமாக நடந்து கொண்ட சிறந்த 11 வீரர்களைக் கொண்ட அணியை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.
அந்த அணியில் ஓப்பனிங் வீரர்களாக இந்தியாவின் கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலி ஆகியோரை ஸ்ரீசாந்த் தேர்ந்தெடுத்துள்ளார். டெல்லியில் பிறந்து இந்தியாவுக்காக விளையாடினாலும் ஐபிஎல் தொடரில் அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டனர். அதே போல ஷாஹித் அப்ரிடி, கம்ரான் அக்மல் போன்ற வெளிநாட்டு வீரர்களுடன் கௌதம் கம்பீர் பலமுறை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
விராட் கோலியும் தம்மை ஸ்லெட்ஜிங் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்து விக்கெட் விழுந்தாலே வெறித்தனமாக கொண்டாட கூடியவராக இருக்கிறார். அந்த இருவரையும் ஓப்பனிங்கில் தேர்ந்தெடுத்துள்ள ஸ்ரீகாந்த் 3வது இடத்தில் ரிக்கி பாண்டிங் 4வது இடத்தில் சௌரவ் கங்குலி ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளார். அதில் மும்பையில் சட்டையை கழற்றி சுழற்றிய ஆண்ட்ரூ ஃபிளின்டாப்க்கு லார்ட்ஸ் மைதானத்தில் கங்குலி பதிலடி கொடுத்ததை மறக்க முடியாது.
அதே போல ரிக்கி பாண்டிங் எதிரணிகளை ஸ்லெட்ஜிங் செய்தவராகவே அறியப்படுகிறார். அதைத் தொடர்ந்து அம்பயருக்கு முன் ஸ்டம்புகளை எட்டி உதைத்து மிரட்டிய வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் கண்டிப்பாக தம்முடைய அணியில் மறக்க மாட்டேன் என்று ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடியும் ஐபிஎல் தொடரில் மிட்சேல் ஸ்டார்க்கிற்கு எதிராக பேட்டை எரிந்து வாயில் பிளாஸ்டர் போட்டுக் கொண்ட பொல்லார்டும் அவரது அணியில் உள்ளனர்.
அதைத் தொடர்ந்து தம்மையே கன்னத்தில் அறைந்து கம்ரான் அக்மல், சோயப் அக்தருடன் சண்டை போட்ட ஹர்பஜன் சிங்கையும் ஸ்ரீசாத் தேர்ந்தெடுத்துள்ளார். அதன் பின் சோயப் அக்தர் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஆண்ட்ரூ நெல் ஆகியோரையும் ஸ்ரீசாந்த் வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்ந்தெடுத்துள்ளார். கடைசியில் ஆண்ட்ரே நெல்லுக்கு சிக்ஸர் அடித்து (2010 டெஸ்ட் போட்டியில்) பதிலடி கொடுத்த தம்மையே ஸ்ரீசாந்த் 11வது வீரராக தேர்ந்தெடுத்துள்ளார்.
இதையும் படிங்க: துலீப் கோப்பை 2024 : கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு கூலாக களமிறங்கிய.. ஸ்ரேயாஸ் ஐயருக்கு நேர்ந்த பரிதாபம்
மொத்தத்தில் ஆல் டைம் நல்ல பையன்கள் கிரிக்கெட் அணி என்ற பெயரில் ஸ்ரீசாந்த் ஜாலியாக தேர்ந்தெடுத்துள்ள வித்தியாசமான அணி: கௌதம் கம்பீர், விராட் கோலி, ரிக்கி பாண்டிங் (துணை கேப்டன்), சௌரவ் கங்குலி (கேப்டன்), சாகித் அப்ரிடி, சாகிப் அல் ஹசன், கைரன் பொல்லார்ட், ஹர்பஜன் சிங், சோயப் அக்தர், ஆண்ட்ரூ நெல், ஸ்ரீசாந்த்