துலீப் கோப்பை 2024 : கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு கூலாக களமிறங்கிய.. ஸ்ரேயாஸ் ஐயருக்கு நேர்ந்த பரிதாபம்

Shreyas Iyer
- Advertisement -

இந்தியாவில் 2024 துலீப் கோப்பை உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2வது ரவுண்ட் செப்டம்பர் 12ஆம் தேதி துவங்கியது. அதில் அனந்தபூரில் நடைபெறும் 3வது போட்டியில் இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் மோதி வருகின்றன. அவ்விரு அணிகளுமே தங்களுடைய முதல் ரவுண்டு போட்டியில் தோல்வியை சந்தித்த நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா டி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணி கொஞ்சம் தடுமாற்றமாக விளையாடி முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் மட்டுமே குவித்தது. அந்த அணிக்கு ரியான் பராக் 37, திலக் வர்மா 10, மயங் அகர்வால் 7 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கவில்லை. அதிகபட்சமாக சம்ஸ் முலானி 89 ரன்களும் தானுஷ் கோட்டியான் 53 ரன்களும் அடித்து கை கொடுத்தனர்.

- Advertisement -

கூலிங் கிளாஸ் போட்டுகிட்டு:

மறுபுறம் இந்தியா டி அணி சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 4, அர்ஷ்தீப் சிங் 2, வித்வத் கவரேப்பா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா டி அணிக்கு துவக்க வீரர் அதர்வா டைட் 4 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்ய வந்தார்.

ஆனால் மைதானத்தில் கொஞ்சம் வெயில் அதிகமாக இருந்ததாக கருதிய அவர் வழக்கத்திற்கு மாறாக கூலிங் கிளாஸ் கண்ணாடிகளை ஹெல்மெட்டுக்குள் போட்டுக் கொண்டு பேட்டிங் செய்ய வந்தார். அந்த வகையில் வித்தியாசமாக அவர் பேட்டிங் செய்ய வந்தது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. இருப்பினும் ஸ்டேன்ஸ் எடுத்து பேட்டிங்கை துவங்கிய அவர் 7 பந்துகளை எதிர்கொண்டு பரிதாபமாக கலீல் அஹ்மத் வேகத்தில் டக் அவுட்டானார்.

- Advertisement -

தடுமாறும் ஷ்ரேயாஸ் ஐயர்

அந்த வகையில் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு கூலாக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் கடைசியில் டக் அவுட்டானதால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். அதே போல யாஷ் துபே 14, சஞ்சு சாம்சன் 5 ரன்களில் அவுட்டானதால் இந்தியா டி 2வது நாள் உணவு இடைவெளியில் 86-4 ரன்களுடன் தடுமாறி வருகிறது.

இதையும் படிங்க: ஜாலியான ஆள் மட்டும் கெடையாது.. அந்த விஷயத்துல ரிஷப் பண்ட் ரொம்ப சீரியஸான பிளேயர் – ரிக்கி பாண்டிங்

களத்தில் தேவ்தூத் படிக்கல் 40*, ரிக்கி புய் 22* ரன்களுடன் உள்ளனர். முன்னதாக கடந்த இங்கிலாந்து தொடரில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடிய ஸ்ரேயாஸ் காயமடைந்து வெளியேறினார். அதன் பின் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு பிசிசிஐ சொல்லியும் கேட்காததால் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் மத்திய ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டிலும் அசத்தாததால் அடுத்து நடைபெறும் வங்கதேச தொடரில் அவர் கழற்றி விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement