அது தெரியாம இந்தியா வராதீங்க.. சச்சின் அடிச்சு நொறுக்கியதை மறந்துடீங்களா.. அக்தருக்கு ஸ்ரீசாந்த் பதிலடி

Sreesanth 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா எளிதாக தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 154/2 என்ற நல்ல துவக்கத்தை பெற்றும் அதன் பின் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 191 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.

மேலும் 192 ரன்களை துரத்திய பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய ரோகித் சர்மா 117 பந்துகள் மீதும் வைத்து இந்தியா தொடர்ந்து 8வது முறையாக உலக கோப்பையில் வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதனால் வரலாற்றை மாற்றுவோம் நிச்சயம் தோற்கடிப்போம் என்று பேசி வந்த சோயப் அக்தர் போன்ற பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.

- Advertisement -

ஸ்ரீசாந்த் பதிலடி:
குறிப்பாக 1999 கொல்கத்தா டெஸ்டில் சச்சினை கோல்டன் டக் அவுட்டாக்கி இந்தியாவை தோற்கடித்தது போல் இம்முறையும் தோற்கடிப்போம் என்று சோயப் அக்தர் தெரிவித்திருந்தார். அதற்கு சச்சின் டெண்டுல்கர் போட்டி முடிந்ததும் நேராக சென்று ட்விட்டரில் கலாய்த்து பதிலடியும் கொடுத்திருந்தார். இந்நிலையில் 90களில் ஸ்பின்னரை போல உங்களை சச்சின் அடித்து நொறுக்கியதை மறந்து விடாதீர்கள் என்று சோயப் அக்தருக்கு இந்திய வீரர் ஸ்ரீசாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் அழுத்தத்தை சமாளிக்க தெரியவில்லை என்றால் இந்தியாவிற்கு வராதீர்கள் என்று முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் கோஷமிட்ட விவகாரத்தில் பாகிஸ்தானுக்கும் பதிலடி கொடுக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் ரசிகர்களால் பாராட்டப்படுவீர்கள். சுமாராக செயல்பட்டால் அவர்கள் உங்களை விமர்சிப்பார்கள். எனவே ஒரு அணியாக இரண்டையும் எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும்”

- Advertisement -

“தோனி பாய் எப்போதும் உங்களுடைய செயலில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சொல்வார். ஏனெனில் அழுத்தம் போட்டியில் எப்போதுமே இருந்து கொண்டிருக்கும். அதனால் அழுத்தத்தை உங்களுக்கு கையாள தெரியவில்லை என்றால் இந்தியாவிற்கு வராதீர்கள். இதே போல விளையாடினால் திரும்ப சென்று விடுங்கள்”

இதையும் படிங்க: சொதப்பல் வீரர் ஷர்துல் தாகூருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள 2 வீரர்கள் – விவரம் இதோ

“மேலும் இந்தியா எளிதாக பாகிஸ்தானை தோற்கடிப்பது தொடர்கதையானாலும் சோயப் பாய் ஏன் இப்படி எழுதுகிறார் என்பது தெரியவில்லை. தம்முடைய கேயரில் சச்சினை அவர் சில தருணங்களில் அவுட்டாக்கியுள்ளார். ஆனால் அவரை சச்சின் பாஜி ஸ்பின்னரைப் போல் பல தருணங்களில் அடித்து நொறுக்கியுள்ளார். எனவே நான் சோயப் அக்தரின் ரசிகன். ஆனால் நீங்கள் சச்சினிடம் வம்பிழுத்தால் நாங்கள் உங்களை விடமாட்டோம்” என்று சிரித்துக் கொண்டே சோயப் அக்தருக்கு பதிலடி கொடுத்தார்.

Advertisement