சொதப்பல் வீரர் ஷர்துல் தாகூருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள 2 வீரர்கள் – விவரம் இதோ

Shardul-Thakur
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 2023-ஆம் ஆண்டிற்கான நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது நாளை அக்டோபர் 22-ஆம் தேதி தர்மசாலா நகரில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்ற முடிந்துள்ள முதல் நான்கு போட்டிகளில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள இந்திய அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்தில் இருக்கிறது.

அதேவேளையில் நியூசிலாந்து அணியும் அவர்கள் விளையாடியுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் நல்ல ரன் ரேட்டுடன் புள்ளி பட்டியல் முதல் இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில் நாளை நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலாவது இடத்திற்கு செல்லப்போவது யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

- Advertisement -

மேலும் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணியில் நிச்சயம் இரண்டு மாற்றங்கள் இருக்கும் என்றும் அந்த வகையில் பாண்டியாவிற்கு பதிலாக சூரியகுமார் யாதவ் கூடுதல் பேட்ஸ்மனாக விளையாடுவார் என்றும் அதேபோன்று ஷர்துல் தாகூர் நாளைய போட்டியில் நீக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஏனெனில் பந்துவீச்சில் தொடர்ச்சியாக சொதப்பலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவருக்கு பதிலாக வாய்ப்புக்காக காத்திருக்கும் அஸ்வின் அல்லது முகமது ஷமி இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே ஹார்டிக் பாண்டியா விளையாடாததால் ஆறாவது பேட்ஸ்மனாக சூரியகுமார் யாதவ் அணியில் விளையாடுவார். அதேபோன்று ஷர்துல் தாகூருக்கு ஒரு முழுநேர வேகப்பந்து வீச்சாளராக முகமது ஷமியே அணியில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : 99/6 டூ 262.. கபில் தேவ் – கிர்மணியை மிஞ்சி உலக சாதனையுடன் இலங்கையை.. சம்பவம் செய்த நெதர்லாந்து ஜோடி

ஒருவேளை அவர் பங்கேற்கவில்லை என்றால் மைதானத்தின் தன்மையை கணக்கில் கொண்டு சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் இணையலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே ஷர்துல் தாகூருக்கு பதிலாக நிச்சயம் இவர்கள் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement