91/6 டூ 262.. கபில் தேவ் – கிர்மணியை மிஞ்சி உலக சாதனையுடன் இலங்கையை.. சம்பவம் செய்த நெதர்லாந்து ஜோடி

NED vs SL
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பான தருணங்களுடன் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு லக்னோ நகரில் நடைபெற்ற 19வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. அதில் கடந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு தோல்வியை பரிசளித்த நெதர்லாந்துக்கு எதிராக வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இலங்கை களமிறங்கியது.

அந்த சூழ்நிலையில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு விக்ரம்ஜித் சிங்கை 4 ரன்களில் அவுட்டாக்கிய கௌசன் ரஜிதா மற்றொரு துவக்க வீரர் மேக்ஸ் ஓ’தாவுத்தை 16 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கி அடுத்ததாக வந்து அதிரடி காட்ட முயற்சித்த அகேர்மேனையும் 29 (31) ரன்களில் காலி செய்தார். போதாக்குறைக்கு நம்பிக்கை நட்சத்திரம் பஸ் டீ லீடியும் 9 ரன்களில் அவுட்டாகி நெதர்லாந்துக்கு ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

அசத்திய நெதர்லாந்து:
அதனால் 68/4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு அடுத்ததாக வந்த நிதமனரு 9, கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 16 ரன்களில் சீரான இடைவெளியில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர். அதன் காரணமாக 91/6 என சரிந்த நெதர்லாந்து நிச்சியம் 200 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த சூழ்நிலையில் ஜோடி சேர்ந்த சைப்ரண்ட் எங்கேல்பேர்ச் மற்றும் லோகன் வேன் பீக் ஆகியோர் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி காப்பாற்ற போராடினர்.

குறிப்பாக 22வது ஓவரில் இணைந்த இவர்கள் மிடில் ஓவர்கள் முழுவதும் இலங்கை பவுலர்களுக்கு வளைந்து கொடுக்காமல் நிதானமும் தேவைப்படும் சமயத்தில் அதிரடியையும் கலந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக நெதர்லாந்து மீட்டெடுத்தனர். நேரம் செல்ல செல்ல மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த ஜோடியில் முதல் ஆளாக அரை சதமடித்து அசத்திய எங்கேல்பேர்ச் 46 ஓவர்கள் அரை நங்கூரமாக நின்று 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 70 (82) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதை விட 7வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் இந்த ஜோடி உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் 7வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் அமைத்த ஜோடி என்ற புதிய உலக சாதனையும் படைத்தது. இதற்கு முன் கடந்த 1983 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக கபில் தேவ் மற்றும் சயீத் கிர்மனி ஆகியோர் 126* ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு இந்தியாவுக்கு மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: தாக்கூரை கழற்றி விடுங்க.. பாண்டியாவுக்கு பதில் அந்த 2 பேரை கொண்டு வாங்க.. ஹர்பஜன் ஆலோசனை

அவருடன் தொடர்ந்து அசத்திய வேன் பீக் தம்முடைய பங்கிற்கு வெறும் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 59 (75) ரன்கள் குவித்து இலங்கைக்கு சவாலை கொடுத்து அவுட்டானார். இறுதியில் 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நெதர்லாந்து 262 ரன்கள் எடுத்து அசத்திய நிலையில் இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா மற்றும் ரஜிதா ஆகியோர் தலா 4 விக்கெட்களை எடுத்தனர்.

Advertisement