தாக்கூரை கழற்றி விடுங்க.. பாண்டியாவுக்கு பதில் அந்த 2 பேரை கொண்டு வாங்க.. ஹர்பஜன் ஆலோசனை

Harbhajan Singh
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 2011 போல கோப்பையை வென்று சாதனை படைக்கும் முனைப்புடன் விளையாடி வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய 5வது போட்டியில் அக்டோபர் 22ஆம் தேதி தர்மசாலா நகரில் வலுவான நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

சாதாரணமாகவே 2019 உலகக்கோப்பை செமி ஃபைனல் உட்பட ஐசிசி தொடர்களில் கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து நியூசிலாந்திடம் தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் இந்தியாவுக்கு இப்போட்டி மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சூழ்நிலையில் பேட்டிங் மற்றும் பவுலிங் துறையில் சமநிலையை ஏற்படுத்தும் ஹர்திக் பாண்டியா காயத்தால் இப்போட்டியில் விளையாட மாட்டார் என்பது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

- Advertisement -

ஹர்பஜன் கருத்து:
ஏனெனில் அவருக்கான சரியான மாற்று வீரர் இல்லாத நிலைமையில் ஷார்துல் தாக்கூர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் பந்து வீச்சில் ரன்கள் வாரி வழங்குபவராக இருக்கிறார். இந்நிலையில் தாக்கூரை கழற்றி விட்டு பேட்டிங் துறையில் பாண்டியா செய்யக்கூடிய ஃபினிஷிங் வேலையை செய்வதற்கு சூரியகுமார் யாதவை தேர்வு செய்யலாம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை அந்த இடத்தில் இடது கை பேட்ஸ்மேன் வேண்டும் என்று நினைத்தால் இசான் கிசான் விளையாடலாம் என்று தெரிவிக்கும் அவர் பவுலிங் துறையில் பாண்டியாவுக்கு நிகராக 10 ஓவர்களை வீசுவதற்கு ஷமியை கொண்டு வரலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஹர்டிக் பாண்டியா ஃபிட்டாக இல்லை என்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய பிரச்சனையாகும்”

- Advertisement -

“ஏனெனில் அவர் நம்முடைய கலவையை செட்டிங் செய்பவராக இருக்கிறார். அதனால் அவர் விளையாடாமல் போனால் நீங்கள் உங்களுடைய அணியை மாற்றியாக வேண்டும். அந்த சூழ்நிலையில் நீங்கள் இசான் கிசான் அல்லது சூரியகுமார் யாதவ் ஆகியோரை முழுமையான பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடலாம். நாம் சர்துல் தாக்கூரை ஆல் ரவுண்டர் திறமைக்காக விளையாடி வருகிறோம். ஆனால் அவருடைய இடத்தில் முகமது ஷmi உங்களுக்கு திடமான 10 ஓவர்களை கொடுப்பார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 20 வருசமா அவங்ககிட்ட தோக்குறோம்.. இம்முறையும் வெற்றி கேரண்டி கிடையாது.. கில்லிடம் ஓப்பனாக பேசிய ரோஹித் சர்மா

இருப்பினும் ஹர்பஜன் சொல்வது போல் விளையாடினால் 7வது இடத்துடன் இந்திய அணியின் பேட்டிங் அழம் முடிந்து போய் விடும் என்றே சொல்லலாம். ஆனாலும் 8வது இடத்தில் அபாரமாக விளையாடி போட்டியை மாற்றும் அளவுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை தாகூர் பெரும்பாலும் அசத்தியதில்லை. எனவே வலுவான நியூசிலாந்து பவுலர்களுக்கு எதிராக தாக்கூர் போன்றவர் பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்த மாட்டார் என்பதால் சூரியகுமார், ஷமி விளையாடுவது நல்ல முடிவாக இருக்கலாம்.

Advertisement