20 வருசமா அவங்ககிட்ட தோக்குறோம்.. இம்முறையும் வெற்றி கேரண்டி கிடையாது.. கில்லிடம் ஓப்பனாக பேசிய ரோஹித் சர்மா

Rohit Sharma Gill
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 22ஆம் தேதி தர்மசாலா நகரில் நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. சொல்லப்போனால் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை சந்திக்காமல் புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் இவ்விரு அணிகளில் ஏராளமான உலகத்தரம் வாய்ந்த நட்சத்திர வீரர்கள் நிறைந்திருக்கின்றனர்.

அதனால் இப்போட்டியில் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உச்சகட்டமாக காணப்படுகிறது. இவ்விரு அணிகளை பொறுத்த வரை நியூசிலாந்து எப்போதுமே ஐசிசி தொடர்களில் இந்தியாவை பெரும்பாலும் தெறிக்க விடும் அணியாக இருந்து வருகிறது என்று சொல்லலாம். ஏனெனில் 50 ஓவர் உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை சந்தித்த 9 போட்டிகளில் நியூசிலாந்து 5 முறை வென்று முன்னிலையில் இருக்கிறது.

- Advertisement -

ரோஹித் அறிவுரை:
இந்தியா 3 முறை மட்டுமே வென்ற நிலையில் 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதை விட 2000 சாம்பியன்ஸ் (நாக் அவுட்) ட்ராபி ஃபைனலில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றதை போலவே 2016 டி20 உலக கோப்பையில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து தோற்கடித்தது. அத்துடன் 2019 உலகக் கோப்பை செமி ஃபைனலில் ஆரம்பத்திலேயே விராட், ரோஹித் போன்றவர்களை சாய்த்த நியூஸிலாந்து கடைசியில் தோனியை ரன் அவுட்டாக்கி இந்தியாவை வீழ்த்திய கதையை ரசிகர்களுக்கு சொல்லித் தெரியவில்லை.

அது போக 2019 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தும் விராட் கோலி தலைமையான இந்தியாவை மண்ணைக் கவ்வ வைத்த நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. மொத்தத்தில் கடந்த 2003 உலகக் கோப்பையில் கடைசியாக நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா அதன் பின் கடந்த 20 வருடங்களில் இதை அனைத்து ஐசிசி போட்டிகளிலும் தோல்வியை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இது பற்றி வங்கதேச போட்டிக்கு பின் செய்தியாளர்கள் தம்மிடம் கேட்டதாக சுப்மன் கில் கேப்டன் ரோகித் சர்மாவிடம் தெரிவித்த போது அவர்கள் நிகழ்த்திய உரையாடல்கள் பின்வருமாறு.
கில்: செய்தியாளர்கள் சந்திப்பில் யாரோ ஒருவர் என்னிடம் கடந்த 2003க்குப்பின் ஐசிசி தொடர்களில் நாம் நியூசிலாந்தை தோற்கடிக்கவில்லை என்று கேட்டது உண்மையா?

இதையும் படிங்க: ஆமா ரோஹித் தான் அந்த சதியை பண்ணாரு.. பாகிஸ்தானை கலாய்த்த வாகன்.. சிரித்த கில்கிறிஸ்ட்

ரோஹித்: அது உண்மையே. ஆனால் அதில் நாம் சிறந்த கிரிக்கெட்டை விளையாடினோம். அதை மட்டுமே நமது தரப்பில் செய்ய முடியும்.
கில்: ஆனால் இந்த ஞாயிற்றுக்கிழமை அதை நம்மால் உடைக்க முடியுமா?
ரோஹித்: பாருங்கள் நாம் விளையாடும் கிரிக்கெட்டில் எதையும் கேரண்டியாக சொல்ல முடியாது. களத்திற்கு நாம் சென்று நம்மால் என்ன முடியுமோ அதை அணிக்காக செய்வோம். அதைத் தவிர்த்து அதிகமாக சிந்திக்க கூடாது. ஆம் கடந்த காலங்களில் நாம் சிறந்த முடிவை கொடுக்கவில்லை. ஆனால் இம்முறை 4 தொடர் வெற்றிகளை பெற்றுள்ளதால் அதை பெறுவதற்கு முயற்சிப்போம்.

Advertisement