போய் 83 படம் பாருங்க.. இந்தியாவின் சி டீம கூட பாகிஸ்தானால் தொட முடியாது.. ஆர்தருக்கு ஸ்ரீசாந்த் பதிலடி

Sreesanth
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தானை வரலாற்றில் 8வது முறையாக தொடர்ந்து தோற்கடித்த இந்தியா தங்களுடைய வெற்றி சரித்திரத்தை தக்க வைத்துக்கொண்டது. குறிப்பாக பாகிஸ்தானை 191 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 117 பந்துகள் மீதம் வைத்து அதிரடியான வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியது.

ஆனால் அந்தப் போட்டியில் பெரும்பாலும் இந்திய ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் விமர்சித்தார். அதை விட இந்தியா அசத்திய தருணங்களில் “சக்தே இந்தியா” உத்வேக பாடல் ஒலிபரப்பப்பட்டதை போல் பாகிஸ்தான் அசத்திய தருணங்களில் “தில் தில் பாகிஸ்தான்” பாடல் ஒலிபரப்பப்படவில்லை என்று விமர்சித்த அவர் இது ஐசிசிக்கு பதில் பிசிசிஐ நடத்தும் தொடர் போல இருப்பதாக பேசியது சர்ச்சையை உண்டாக்கியது.

- Advertisement -

ஸ்ரீசாந்த் பதிலடி:
அதை விட எஞ்சிய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இவை அனைத்திற்கும் ஃபைனலில் இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியாவின் சி அணியை கூட தற்போதைய பாகிஸ்தான் அணியாள் தோற்கடிக்க முடியாது என்று அவருக்கு ஸ்ரீசாந்த் அதிரடியான பதிலை கொடுத்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவருக்கு ஸ்ரீசாந்த் கொடுத்துள்ள வெளிப்படையான பதில்கள் பின்வருமாறு.

“கபில் தேவின் வாழ்க்கை வரலாற்றை சுட்டிக்காட்டும் 83 திரைப்படத்தை ஆர்தருக்கு காட்டுங்கள். அப்போது தான் பிசிசிஐ எந்தளவுக்கு அடிமட்டத்திலிருந்து போராடி இந்தளவுக்கு உயர்ந்து வந்துள்ளது என்பது தெரியும். மேலும் இந்திய அணிக்கு உலகம் முழுவதிலும் ஆதரவு கிடைக்கும். குறிப்பாக நான் தென்னாப்பிரிக்காவின் டர்பனில் விளையாடிய போது இந்தியாவில் விளையாடியதைப் போலவே இருந்தது”

- Advertisement -

“மேலும் இந்தியாவை ஃபைனலில் பார்த்துக் கொள்கிறோம் என்று ஆர்தர் சொன்னார். ஆனால் ஐசிசி நடத்தும் எந்த தொடரிலும் இந்தியாவை அவர் சொன்னது போல் பாகிஸ்தான் தோற்கடிக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. மேலும் இந்தியாவின் சி அணி கூட பாகிஸ்தானின் முதன்மை அணியை தோற்கடிக்கும். ஐபிஎல் தொடரில் விளையாடாத 11 பேர் கொண்ட அணி கூட பாகிஸ்தானை வீழ்த்தும்”

இதையும் படிங்க: அப்டி அழுதது ஆப்கானிஸ்தான் பையன் இல்ல.. சாக்லேட் கொடுத்து.. இந்தியாவுக்கு நன்றி சொன்ன முஜீப்

“அதே போல உலகின் மிகப்பெரிய அகமதாபாத் மைதானத்தில் விளையாடுவது பாகிஸ்தானுக்கு கனவாக இருக்கும். ஆனால் நாங்கள் அந்த வாய்ப்பை கொடுத்தும் பாகிஸ்தான் இவ்வாறு பேசியதால் இனி அங்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்காது” என்று கூறினார். முன்னதாக 2023 ஆசிய கோப்பையிலும் பாகிஸ்தானை அடித்து நொறுக்கி 228 ரன்களை வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement