அப்டி அழுதது ஆப்கானிஸ்தான் பையன் இல்ல.. சாக்லேட் கொடுத்து.. இந்தியாவுக்கு நன்றி சொன்ன முஜீப்

Mujeeb Ur Rahman
- Advertisement -

இந்தியாவில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் அக்டோபர் 15ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை கத்துக்குட்டியாக கருதப்படும் ஆப்கானிஸ்தான் 69 ரன்கள் வித்தியாசத்தில் அசால்டாக தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் சிறப்பாக செயல்பட்டு 285 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் 285 ரன்களை துரத்திய இங்கிலாந்தை ஆரம்பம் முதலே பந்து வீச்சில் அசத்திய ஆப்கானிஸ்தான் 40.3 ஓவரிலேலேயே 215 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. குறிப்பாக ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், டேவிட் மாலன், கேப்டன் ஜோஸ் பட்லர் உள்ளிட்ட அதிரடி வீரர்களை குறைந்த ரன்களில் அவுட்டாக்கி அசத்திய ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ரசித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

ரசிகர்களுக்கு நன்றி:
அதனால் உலகக்கோப்பையில் 14 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக வென்ற ஆப்கானிஸ்தான் சர்வதேச கிரிக்கெட்டில் வலுவான இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. அந்த வகையில் தங்களுடைய கிரிக்கெட்டின் இந்த பொன்னான நாளில் வென்ற ஆட்டநாயகன் விருதை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு சமர்ப்பிப்பதாக முஜீப் உர் ரகுமான் தெரிவித்திருந்தார்.

அதை விட அப்போட்டியின் முடிவில் பவுண்டரி எல்லையிலிருந்து பந்தை எடுத்துப் போடும் சிறுவர்களில் ஒரு சின்ன பையன் ஆப்கானிஸ்தான் வென்றதுமே முஜீப் உர் ரகுமானை கட்டிப்பிடித்து தேம்பித் தேம்பி அழுதார். குறிப்பாக தமக்கு மிகவும் பிடித்த ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்த ஆனந்தத்தில் அழுத அந்த சிறுவனை நெகிழ்ச்சியடைந்து முஜீப்பும் கட்டிப்பிடித்து கண்களை துடைத்தார்.

- Advertisement -

மேலும் அந்த சிறுவனுக்கு சாக்லேட்டை பரிசளித்து தண்ணீரி குடிக்க வைத்து முஜீப் அழுகையை நிறுத்தி அன்பை காட்டியது சமூக வலைதலங்களில் வைரலானது. இந்நிலையில் அந்த சிறுவன் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் அல்ல இந்தியாவைச் சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ள முஜீப் வெளிநாட்டை நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் தங்களுக்கு பெரிய ஆதரவு கொடுத்த இந்திய ரசிகர்களுக்கு ட்விட்டரில் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அதுல சொதப்புறாங்களான்னு பாப்போம்.. இனிமேல் இந்தியாவை தோற்கடிப்பது ரொம்ப கஷ்டம்.. பாண்டிங் கருத்து

இது பற்றி அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “அது ஆப்கானிஸ்தான் பையன் கிடையாது. இளம் இந்திய பையன். டெல்லியைச் சேர்ந்த இந்த இந்திய பையனை வெற்றிக்கு பின் பார்த்ததில் மகிழ்ச்சியடைகிறேன் (கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டல்ல உணர்வாகும்). மேலும் கடந்த இரவில் எங்களுக்கு அற்புதமான ஆதரவு கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி. இந்த ஆதரவுகளுக்கு நாங்கள் நன்றியுடையவர்களாக இருக்கிறோம். இதே ஆதரவுக்காக நாங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். அன்பை கொடுத்ததற்கு நன்றி டெல்லி” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement