IPL 2023 : நேற்றைய போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களால் நடைபெற்ற அரிதான நிகழ்வு – விவரம் இதோ

Varun-Chakravarthy
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஒன்பதாவது லீக் போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா அணியானது 81 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.

Suyash Sharma

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது மிகச் சிறப்பாக விளையாடி 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக ஷர்துல் தாகூர் 29 பந்துகளில் 68 ரன்கள் குவித்து அசத்தினார்.

பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 123 ரன்களை மட்டுமே குவித்தது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி சார்பாக வருண் சக்கரவர்த்தி நான்கு விக்கெட்டுகளையும், சுயாஷ் ஷர்மா மூன்று விக்கெட்டுகளையும், சுனில் நரேன் இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினர்.

Sunil Narine

பேட்டிங்கில் ஷர்துல் தாகூரின் அதிரடியினாலும், பந்துவீச்சில் சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்தினாலும் பெங்களூரு அணி முற்றிலுமாக கொல்கத்தா அணியிடம் சரணடைந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் இரண்டு அணிகளை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர்களும் இணைந்து ஒரு அரிதான சாதனையையும் நிகழ்த்தியுள்ளனர்.

- Advertisement -

அந்த வகையில் கொல்கத்தா அணியின் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் மற்றும் சுயாஷ் ஷர்மா ஆகியோர் இணைந்து ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இப்படி ஒரு ஐ.பி.எல் இன்னிங்ஸில் 10 விக்கெட்களில் ஒன்பது விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றுவது இதுவே முதல் முறை.

இதையும் படிங்க : RCB vs KKR : தோத்தது கூட பரவாயில்ல. ஆனா இப்படி ஒரு அசிங்கம் நடந்திருக்க கூடாது – டூபிளெஸ்ஸிஸ் வருத்தம்

அதேபோன்று முதலில் விளையாடிய கரண் ஷர்மா மற்றும் பிரேஸ்வெல் ஆகியோர் பெங்களூர் அணிக்காக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதால் மொத்தம் இந்த போட்டியில் மட்டும் 20 விக்கெட்டுகளில் 12 விக்கெட்டுகள் சுழற்பந்து வீச்சாளர்கள் மூலம் கிடைத்துள்ளது. அதன்படி ஒரு ஐபிஎல் மேட்சில் அதிகப்படியான விக்கெட்டுகள் சுழற்பந்து வீச்சாளர்களின் மூலம் விழுந்ததாகவும் சாதனை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement