RCB vs KKR : தோத்தது கூட பரவாயில்ல. ஆனா இப்படி ஒரு அசிங்கம் நடந்திருக்க கூடாது – டூபிளெஸ்ஸிஸ் வருத்தம்

Faf
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 9-ஆவது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டூப்லெஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியின் கேப்டன் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

Shardul Thakur

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக துவக்க வீரர் குர்பாஸ் 57 ரன்களையும், ஷர்துல் தாகூர் 68 ரன்களையும் குவித்து அசத்தினர். ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி 160 ரன்களையாவது அடிக்குமா? என்று எதிர்பார்த்த வேளையில் கொல்கத்தா அணி 200 ரன்களை கடந்தது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 123 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் கூறுகையில் :

KKR

நாங்கள் பந்துவீச்சின் போது மிகச் சிறப்பாகவே துவங்கியதாக நினைக்கிறேன். 13 ஓவர்களில் நூறு ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்ததால் நல்ல பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்ததாக நினைத்தேன். ஆனால் இறுதியில் ஷர்துல் தாகூர் விளையாடிய விதம் எங்களது அணியிடம் இருந்து ஆட்டத்தை அப்படியே மாற்றியது.

- Advertisement -

கடைசியாக 20 முதல் 25 ரன்கள் கூடுதலாக கொடுத்து விட்டோம் என்று நினைக்கிறேன். கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினார்கள். அவர்களது பந்துவீச்சு போட்டியை அப்படியே திருப்பியது. இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்தது கூட பிரச்சனை இல்லை. ஆனால் 160 ரன்கள் வரையாவது அடித்திருக்க வேண்டும். அதையும் நாங்கள் செய்யாததில் வருத்தம்.

இதையும் படிங்க : IPL 2023 : அண்டர்-19 டீம்ல உங்களுக்கு கீழ விளையாண்ட அவர பாத்து கத்துக்கோங்க – சொதப்பும் பிரிதிவி ஷா, விளாசும் சேவாக்

இருந்தாலும் இது டி20 கிரிக்கெட் போட்டி. எனவே அடுத்தடுத்த போட்டிகளுக்கு நாம் தயாராகும் விதமாக இந்த போட்டியில் இருந்து பெற்ற பாடங்களை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். அதே போன்று மீண்டும் சிறப்பான பயிற்சியை மேற்கொண்டு பலமாக திரும்பவும் என டூபிளெஸ்ஸிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement