IPL 2023 : அண்டர்-19 டீம்ல உங்களுக்கு கீழ விளையாண்ட அவர பாத்து கத்துக்கோங்க – சொதப்பும் பிரிதிவி ஷா, விளாசும் சேவாக்

Prithivi Shaw Sehwag
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 4ஆம் தேதியன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 7வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த நடப்பு சாம்பியன் குஜராத் தன்னுடைய 2வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. மறுபுறம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சுமாராகவே செயல்பட்ட டெல்லி தன்னுடைய முதலிரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளது. அந்த அணிக்கு ரிசப் பண்ட் காயத்தால் விளையாடாத நிலையில் கேப்டன் டேவிட் வார்னர் 37 (32), 56 (48) என 2 போட்டிகளிலும் ஓரளவு நல்ல ரன்களை குவித்து நல்ல தொடக்கத்தை கொடுக்க முயற்சித்தார்.

Prithvi-Shaw

- Advertisement -

ஆனால் அவருடன் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீரர் பிரிதிவி ஷா 12 (9), 7 (5) என 2 போட்டிகளிலும் சொற்ப ரன்களில் மார்க் வுட், முகமது ஷமி போன்ற அதிரடியான வேகப்பந்து வீச்சாளர்களிடம் அவுட்டாகி வார்னருக்கு கை கொடுக்காமல் சென்றது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து சாதனை படைத்து அதிரடியாக விளையாடும் தொடக்க வீரராக தன்னை அடையாளப்படுத்தினார்.

சேவாக் விளாசல்:
அதனால் சச்சின், சேவாக், லாரா ஆகியோர் கலந்த கலவை என அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டிய நிலையில் நாளடைவில் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு சிறப்பாக செயல்பட தவறிய அவர் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். அதை தொடர்ந்து உடல் எடையை குறைத்து உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக போராடி வந்த அவர் கடந்த பிப்ரவரி நடைபெற்ற நியூசிலாந்து டி20 தொடரில் தேர்வாகியும் விளையாடும் 11 பேர் அணியில் இடம் பெறவில்லை.

shaw

அதனால் இந்திய அணியில் மீண்டும் இடத்தை பிடிக்க இந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட அவர் எக்ஸ்ட்ராவாக உழைத்து வருவதால் இந்த சீசனில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்துவார் என்று ரிக்கி பாண்டிங் ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்புடன் பாராட்டினார். அதே போல் பிரிதிவி ஷா இந்தியாவுக்கு விளையாட தயாராக இருப்பதாக சௌரவ் கங்குலி ஆதரவு கொடுத்தார். ஆனால் அவர்களுடைய நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்படாமல் சொதப்பும் அவர் மீண்டும் சுமாரான ஷாட்களை அடித்து அவுட்டாவது ஏமாற்றமளிப்பதாக முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக அண்டர்-19 அணியில் பிரிதிவி ஷா தலைமையில் விளையாடிய சுப்மன் கில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் தவறுகள் செய்தாலும் தற்போது அதிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டு முன்னேறியுள்ளதாக சேவாக் கூறியுள்ளார். எனவே தவறு செய்வது தவறில்லை ஆனால் சுப்மன் கில், ருதுராஜ் கைக்வாட் போன்றவர்களைப் போல் அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு பிரிதிவி ஷா முன்னேற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் சேவாக் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

Sehwag

“இந்த மாதிரியான ஷாட்களை அடித்து அவர் பலமுறை அவுட்டாகியுள்ளார். ஆனால் அதே சமயம் இந்த தவறுகளில் இருந்து அவர் பாடத்தை கற்க வேண்டுமல்லவா? இந்த தருணத்தில் சுப்மன் கில்லை பாருங்கள். அவர் அவருடன் அண்டர்-19 அளவிலான கிரிக்கெட்டில் விளையாடி தற்போது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்காக விளையாடுகிறார். அவரைப் போல இவரும் ஐபிஎல் போன்ற அற்புதமான இடத்தை பயன்படுத்தி அதிக ரன்களை பயன்படுத்த வேண்டும்”

இதையும் படிங்க:IPL 2023 : ஆர்சிபி ஜெயிக்கணும்னு ஆசையும் வாய்ப்பும் இருக்கு ஆனா கோப்பையை அவங்க ஜெயிக்க அதிக வாய்ப்பிருக்கு – ஏபிடி பேட்டி

“அதே போல் ருதுராஜ் கைக்வாட் ஏற்கனவே ஒரு சீசனில் 600 ரன்கள் அடித்துள்ளார். சுப்மன் கில்லும் பெரிய ரன்களை குவித்துள்ளார். எனவே அவர்களைப் போல பிரித்வி ஷா’வும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பெரிய ரன்களை குவிக்க வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல இதுவரை ஐபிஎல் தொடரிலேயே பிரத்வி ஷா எந்த சீசனிலும் 500 ரன்கள் கூட அடித்ததில்லை. ஆனாலும் குட்டி சேவாக் என்று ரசிகர்கள் பாராட்டும் அளவுக்கு திறமை கொண்ட அவர் இன்னும் அதற்கு தகுந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை என்றே கூறலாம்.

Advertisement