IPL 2023 : ஆர்சிபி ஜெயிக்கணும்னு ஆசையும் வாய்ப்பும் இருக்கு ஆனா கோப்பையை அவங்க ஜெயிக்க அதிக வாய்ப்பிருக்கு – ஏபிடி பேட்டி

ABD
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கோடைகாலத்தில் மகிழ்விப்பதற்காக வந்துள்ள ஐபிஎல் 2023 தொடரில் கோப்பை வெல்ல களமிறங்கியுள்ள 10 அணிகளில் தங்களது முதல் கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் கனவுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விளையாடி வருகிறது. கடந்த 15 வருடங்களில் அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் தலைமையில் ஏபி டீ வில்லியர்ஸ், கிறிஸ் கெயில் போன்ற நிறைய நட்சத்திரங்கள் விளையாடியும் லீக் சுற்றில் அசத்திய பெங்களூரு நாக் அவுட் சுற்றில் ஏதோ ஒரு முக்கிய தருணத்தில் சொதப்பி வெற்றியையும் கோப்பையும் எதிரணிக்கு தாரை வார்த்து வருவதை வழக்கமாக வைத்துள்ளது.

Kohli

- Advertisement -

குறிப்பாக விராட் கோலி இருக்கும் வரை கோப்பை வெல்ல முடியாது என்ற விமர்சனங்களால் பதவி விலகிய அவருக்கு பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற டு பிளேஸிஸ் தலைமையில் கடந்த வருடம் லீக் சுற்றில் அசத்திய பெங்களூரு வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் தோற்று வெளியேறியது. அதனால் சூரியன் மேற்கே உதித்தாலும் பெங்களூரு மட்டும் கோப்பையை வெல்லாது என்ற விமர்சனங்களும் கிண்டல்களும் 15 வருடமாக தொடர்ந்து வருகிறது. இருப்பினும் மனம் தளராமல் தோல்விகளிலிருந்து பாடத்தை கற்றுக் கொண்டு இம்முறை அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்புடன் களமிறங்கியுள்ள அந்த அணி மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் அதிரடியாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்த சீசனை வெற்றியுடன் துவங்கியுள்ளது.

ஏபிடி கணிப்பு:
குறிப்பாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து தற்போது ஃபார்முக்கு வந்து முதல் போட்டியில் 82* ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தது பெங்களூருவுக்கு பலமாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் 2வது போட்டியில் கொல்கத்தாவிடம் மீண்டு சொதப்பி தோற்ற நிலையில் பெங்களூரு சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பதே தம்முடைய ஆசை என்று தெரிவிக்கும் ஏபி டீ வில்லியர்ஸ் அதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.

GT vs CSK MS Dhoni

அதே சமயம் முதல் சீசனிலேயே கோப்பையை வென்று இந்த வருடமும் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் இப்போதே முதலிடம் பிடித்துள்ள குஜராத்தும் கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “வெற்றியாளரை கணிப்பது மிகவும் கடினமாகும். இருப்பினும் நீண்ட நேரத்திற்கு முன் ஐபிஎல் ஏலத்தின் போது நான் குஜராத் டைட்டன்ஸ் அடுத்தடுத்த கோப்பைகளை வெல்லும் என்று தெரிவித்திருந்தேன். அதில் இப்போதும் உறுதியாக இருக்கிறேன்”

- Advertisement -

“அதே சமயம் ஆர்சிபி கோப்பையை வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். குறிப்பாக கடந்த வருடம் அவர்களிடம் சமநிலையுடன் கூடிய சிறப்பான அணி இருந்தது. இப்போதும் அவர்களிடம் தேவையான பவர் இருப்பதால் ஆர்சிபி சிறந்த வழியில் செல்லும் என்று நம்புகிறேன். அதே போல் ஃபார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலியிடம் நான் எந்த மாற்றத்தையும் பார்க்கவில்லை. அவரிடம் ஏற்கனவே இருந்த அதே சமநிலை மற்றும் டெக்னிக் இப்போதும் உள்ளது. களத்தில் அவர் துடிதுடிப்பான வீரராக தொடர்ந்து செயல்படுகிறார்”

“இருப்பினும் இந்த சீசனில் அவர் புத்துணர்ச்சியுடன் வந்துள்ளதாக நான் கருதுகிறேன். குறிப்பாக சமீபத்திய சில பேட்டிகளில் அவர் முன்பை விட மனம் விட்டு சிரிப்பதை பார்த்தேன். மேலும் கடந்த சீசனுடன் கேப்டன்ஷிப் பொறுப்பை விட்டது அவர் புத்துணர்ச்சியடைவதற்கு பெரிய பங்காற்றியுள்ளது என்று நினைக்கிறேன். சர்வதேச கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரிலும் அவர் நீண்ட காலமாக சிறந்த கேப்டனாகவே செயல்பட்டார்”

இதையும் படிங்க:வீடியோ : தாகூர் மேஜிக், நரேன் – சக்ரவர்த்தி மயஜாலம், மீண்டும் வேலையை ஆரம்பித்த ஆர்சிபி – கேகேஆர் வென்றது எப்படி

“இருப்பினும் அதனால் உங்களுடைய குடும்பம் மற்றும் உறவினர், நண்பர்களுடன் பேசி சிரிப்பதற்கான நேரம் உங்களுக்கு கிடைக்காது. எனவே இந்த சீசனில் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே புத்துணர்ச்சியுடன் சுதந்திரமாக விளையாடலாம் என்பதே அவருடைய தாரக மந்திரமாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement