அது நாங்க நெனச்ச மாதிரி இல்ல.. இந்தியாவை கன்ட்ரோல் பண்ணியும் அதுல தோத்துட்டோம்.. பவுமா சோகம்

Temba Bavuma
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 5ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற லீக் போட்டியில் வலுவான தென்னாப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் இதுவரை விளையாடிய 8 போட்டுக்களிலும் தொடர்ந்து 8வது வெற்றியை பதிவு செய்துள்ள இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடத்தை தனதாக்கி தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் காட்டியுள்ளது.

அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 326/5 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதமடித்து 101* ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களும் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் யான்சன், மகாராஜ், சம்சி, ரபாடா, யான்சன் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

- Advertisement -

கொல்கத்தா பிட்ச்:
ஆனால் அதை தொடர்ந்து 327 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்கா ஆரம்பத்திலிருந்து இந்தியாவின் அனல் பறந்த பந்து வீச்சு தாக்கப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 83 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மார்க்கோ யான்சென் 14 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

இத்தனைக்கும் இத்தொடரில் அசால்டாக 300 – 400 ரன்களை அடித்து எதிரணிகளை துவம்சம் செய்து வந்த தென்னாபிரிக்கா இப்போட்டியில் பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் பேட்டிங், பவுலிங் துறைகளில் மீண்டும் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா வலுவான தென்னாப்பிரிக்காவையே தோற்கடித்து 2023 உலகக் கோப்பையை வெல்லாமல் இருக்க மாட்டோம் என்பதை நிரூபித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் கொல்கத்தா பிட்ச் தாங்கள் கணித்ததை விட வேறு மாதிரி இருந்ததால் தோல்வியை சந்திக்க நேரிட்டதாக தென்னாபிரிக்க கேப்டன் தெம்பா பவுமா கூறியுள்ளார். அத்துடன் 350 ரன்கள் தொடுவதற்கான துவக்கத்தை பெற்ற இந்தியாவை கட்டுப்படுத்தியும் சேசிங்கில் தோற்றதாக தெரிவிக்கும் அவர் இதே மைதானத்தில் செமி பைனல் நடைபெற போவதை நினைத்தும் கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது சவாலாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் நாங்கள் சேசிங்கில் தோற்றோம்”

இதையும் படிங்க: என்னோட ஹீரோ அவரு.. அவரோட சாதனையை சமன் செய்ததில் மகிழ்ச்சி.. – ஆட்டநாயகன் விராட் கோலி உருக்கம்

“சேசிங் பற்றி எங்களுடைய பேட்ஸ்மேன்களிடம் நாங்கள் பேசினோம். இந்தியா முதல் 10 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்தனர். ஆனால் அதன் பின் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு ரன்ரேட்டை கட்டுப்படுத்தினோம். ரோகித் சர்மா நல்ல துவக்கத்தை கொடுத்தார் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். நாங்கள் சந்தேகப்பட்டது போலவே பிட்ச் விளையாடியது. துரதிஷ்டவசமாக எங்களால் அதில் உட்படுத்திக் கொள்ள முடியவில்லை. இதே மைதானத்தில் நாங்கள் மீண்டும் அரையிறுதி சுற்றில் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

Advertisement