என்னோட ஹீரோ அவரு.. அவரோட சாதனையை சமன் செய்ததில் மகிழ்ச்சி.. – ஆட்டநாயகன் விராட் கோலி உருக்கம்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற 37-வது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய கிரிக்கெட் அணியானது 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரில் தங்களது எட்டாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியல் மீண்டும் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. அதன்படி இன்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் குவித்தது.

பின்னர் 327 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 27.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 83 ரன்கள் மட்டுமே குவித்ததால் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49-வது சதத்தை பதிவு செய்த விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

பின்னர் போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் விராட் கோலி கூறுகையில் : இது ஒரு பெரிய போட்டி இந்த தொடரில் கடினமான அணியாக பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்க அணியை நாங்கள் வீழ்த்தியதில் மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய பிறந்தநாளில் நான் சதம் அடித்தது மிகவும் ஸ்பெஷலான ஒன்று. அதோடு ரசிகர்களும் இந்த சதத்தை மேலும் ஸ்பெஷலாக மாற்றியுள்ளனர்.

இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் மிகச் சிறப்பான அடித்தளத்தை அமைத்ததால் என்னால் எளிதாக விளையாட முடிந்தது. பந்து பழையதாக மாறிய பின்னர் பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் நான் இறுதிவரை விளையாட வேண்டும் என்ற ஒரு மெசேஜ் வந்தது. அதனால் நான் கடைசி வரை நின்று விளையாட விரும்பினேன்.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியில் இறுதிவரை விளையாடி சதம் அடித்ததில் மகிழ்ச்சி. இந்த போட்டியில் 315 ரன்கள் தாண்டியதும் நாங்கள் வெற்றிக்கான ரன்களை எடுத்து விட்டதாகவே கருதினேன். சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்ததில் மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய ஹீரோ அவர்தான் அவரது சாதனையை சமன் செய்தது எனக்கு இன்னும் ஸ்பெஷலான ஒரு தருணம்.

இதையும் படிங்க : 3 பார்ட்மேட்லயும் இந்திய அணிக்காக அவரு கலக்குறாரு. அவரு எங்களுக்கு ரொம்ப முக்கியம் – கேப்டன் ரோஹித் பாராட்டு

பேட்டிங்கை பொறுத்த வரை சச்சின் டெண்டுல்கர் தான் ஒரு பர்பெக்ட்டான வீரர். அவரது இந்த சாதனையை நான் சமன் செய்ததில் மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. நான் சிறுவயதிலிருந்தே அவரை டிவியில் பார்த்துதான் வளர்ந்தேன். தற்போது அவரிடம் இருந்தே எனக்கு பாராட்டு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக விராட் கோலி உருக்கத்துடன் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement