அசால்ட்டாக 350 ரன்களை அடித்து தள்ளும் தெ.ஆ புதிய தனித்துவ உலக சாதனை.. அடுத்த மேட்ச்சில் இந்தியா தாங்குமா?

IND vs RSA
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 1ஆம் தேதி புனே நகரில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்தை 190 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த தென்னாப்பிரிக்கா புள்ளி பட்டியலில் இந்தியாவை முந்தி முதலிடத்திற்கு முன்னேறியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா டீ காக் 114, வேன் டெர் டுஷன் 133 ரன்கள் எடுத்த உதவியுடன் 367 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய நியூசிலாந்து ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 35.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 167 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக க்ளென் பிலிப்ஸ் 60 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

இந்தியா தாங்குமா:
இதன் வாயிலாக 1999க்குப்பின் 24 வருடங்கள் கழித்து முதல் முறையாக உலகக்கோப்பையில் நியூசிலாந்தை தோற்கடித்து தென்னாப்பிரிக்கா அகத்தியுள்ளது. அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் வலுவான நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்திலும் தங்களுடைய பெரிய வெற்றியை பதிவு செய்து தென்னாப்பிரிக்கா சாதனை படைத்தது.

இது போக இத்தொடரில் 79 சிக்ஸர்கள் அடித்துள்ள தென்னாபிரிக்கா இந்த உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற உலக சாதனை படைத்துள்ளது. இதை விட இந்த உலக கோப்பையில் இலங்கைக்கு எதிராக 428/5 ரன்களை அடித்து வென்ற தென்னாபிரிக்கா நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக 399/7 ரன்கள் குவித்து வென்றது. அதே வேகத்தில் வங்கதேசத்திற்கு எதிராகவும் 382/5 ரன்கள் குவித்து வென்ற அந்த அணி நியூசிலாந்துக்கு எதிராக இப்போட்டியில் 357/4 ரன்கள் குவித்து வென்றது.

- Advertisement -

அதாவது இந்த உலகக்கோப்பையில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 4 முறை தென்னாபிரிக்கா 350+ ரன்களுக்கு மேல் அசால்டாக அடித்து வென்றுள்ளது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட தொடரில் 4 முறை 350க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த முதல் அணி என்ற தனித்துவமான உலக சாதனையும் தென்னாப்பிரிக்கா படைத்துள்ளது. இதற்கு முன் வேறு எந்த அணியும் வேறு எவ்விதமான ஒருநாள் தொடரிலும் இப்படி 4 முறை 350+ ரன்கள் அடித்ததில்லை.

இதையும் படிங்க: நீங்க வேணா பாருங்க.. இந்த 3 அணிகளில் ஒன்றுதான் உலககோப்பையை வெல்லும் – ஜாக் காலிஸ் கணிப்பு

அப்படி அதிரடியான சிக்சர்களை பறக்க விட்டு அசால்டாக 350 – 400 ரன்களை அடித்து வரும் தென்னாப்பிரிக்கா தங்களுடைய அடுத்த போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. நவம்பர் 5ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் அப்போட்டியில் இப்படி மிரட்டலாக செயல்பட்டு வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தாக்கு பிடித்து வெல்லுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Advertisement