தொடரும் கவலை – தொடரில் தோற்றும் இந்தியாவை சொந்த மண்ணில் வெச்சு செய்த தெ.ஆ – 3 அபார சாதனைகள்

Rillew Rossow David Miller Suryakumar Yadav
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்ற முதலிரண்டு கிரிக்கெட் போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று கோப்பையை கைப்பற்றிய இந்தியா அக்டோபர் 4ஆம் தேதியன்று நடைபெற்ற சம்பிரதாய கடைசி போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தூரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அதிரடியாக செயல்பட்டு 227/3 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு கேப்டன் பவுமா 3 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினாலும் தொடக்க வீரர் குயின்டன் டி காக் 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 68 (43) ரன்களும் 3வது இடத்தில் களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய ரிலீ ரோசவ் 7 பவுண்டரி 8 சிக்சருடன் சதமடித்து 100* (48) ரன்களும் குவித்தனர்.

Rilee-Rossow

- Advertisement -

இறுதியில் திரிஷன் ஸ்டப்ஸ் 23 (18) ரன்களும் டேவிட் மில்லர் 19* (5) ரன்களை விளாசி பினிஷிங் கொடுத்தனர். அதை தொடர்ந்து 228 ரன்களை துரத்திய இந்தியா ஆரம்பம் முதலே தென் ஆப்பிரிக்காவின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 18.3 ஓவரில் 178 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் ரோஹித் 0, ஷ்ரேயஸ் ஐயர் 1, ரிஷப் பண்ட் 27, சூரியகுமார் யாதவ் 8 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அதிக பட்சமாக தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரி 4 சிக்சருடன் 46* (21) ரன்களும் தீபக் சஹர் 31 (17) ரன்களும் விளாசி போராடி அவுட்டானார்கள்.

வேண்டும் பயனில்லை:
அந்தளவுக்கு சிறப்பாக பந்து வீசி ஆறுதல் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக பிரிடோரியஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இருப்பினும் முதலிரண்டு போட்டிகளில் பெற்ற வெற்றியால் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்று சாதனை படைத்த இந்தியா வெற்றியுடன் உலக கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியா புறப்பட உள்ளது. ஆனாலும் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இருந்தும் சமீபத்திய ஆசிய கோப்பையில் தோற்க காரணமாக அமைந்த மோசமான பந்து வீச்சில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய தொடரிலும் இந்த தென் ஆப்பிரிக்க தொடரிலும் எவ்வித முன்னேற்றத்தை காணாமலேயே இருப்பது ரசிகர்களுக்கு கவலையை கொடுக்கிறது.

Rohit Sharma

அதற்கேற்றார்போல் இந்தியாவின் உண்மையான பவுலிங் பலவீனத்தை அம்பலப்படுத்திய தென் ஆப்பிரிக்காவின் சில சாதனைகளைப் பற்றி பார்ப்போம்:
1. முதலில் சொந்த மண்ணில் வலுவாக அணியாக கருதப்படும் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் டி20 கிரிக்கெட்டில் டாப் 2 அதிகபட்ச ஸ்கோர்களை பதிவு செய்த அணியாக தென்னாபிரிக்கா அபாரா சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. 227/3, தென் ஆப்பிரிக்கா, இந்தூர், 2022*
2. 221/3, தென ஆப்பிரிக்கா, கௌகாத்தி, 2022*
3. 215/5, இலங்கை, நாக்பூர், 2009

- Advertisement -

2. அதைவிட இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் டி20 கிரிக்கெட்டில் ரன்கள் அடிப்படையில் பெரிய வெற்றியை பதிவு செய்த அணி என்ற சாதனையும் தென்னாப்பிரிக்கா படைத்துள்ளது. அந்தப் பட்டியல்:
1. 49 ரன்கள், தென் ஆப்பிரிக்கா, இந்தூர், 2022*
2. 47 ரன்கள், நியூஸிலாந்து, நாக்பூர், 2016

David Miller IND vs Sa.jpeg

3. மேலும் கடந்த போட்டியில் மில்லர் சதமடிக்க இப்போட்டியில் ரோசவ் சதமடித்தார். இப்படி டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஒரே தொடரில் 2 சதங்களை அடித்த முதல் அணி என்ற பெருமையும் தென் ஆப்பிரிக்கா பெற்றுள்ளது.

- Advertisement -

4. அத்துடன் 2014 முதல் 2021 வரை வெறும் 6 போட்டிகளில் மட்டுமே 200 ரன்களை கொடுத்த இந்தியா 2022இல் மட்டும் 6 போட்டிகளில் 200 ரன்களை கொடுத்துள்ளது இது தற்சமயத்தில் இந்திய பவுலிங் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை காட்டுகிறது. மேலும் டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் இந்த வருடம் தான் 6 முறை 200 ரன்களை இந்தியா கொடுத்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 2016இல் அதிகபட்சமாக வெறும் 3 முறை மட்டுமே கொடுத்திருந்தது.

INDIA Arshdeep Singh Harshal Patel

5. அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை (23) பதிவு செய்த அணியாக இந்த வருடம் உலக சாதனை படைத்துள்ள இந்தியா வரலாற்றில் முதல் முறையாக 8 தோல்விகளையும் பதிவு செய்து மோசமான சாதனை படைத்துள்ளது. இதற்குமுன் கடந்த 2017இல் 7 தோல்விகளை பதிவு செய்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

இதையும் படிங்க : IND vs SA : பும்ராவுக்கு பதில் நான்தான் சரியானவன் – புதிய வரலாற்று சாதனை படைத்து நிரூப்பிக்கும் தீபக் சஹர்

6. முன்னதாக கௌகாத்தி போட்டியிலும் இதே போல் ரன்களை வாரி வழங்கிய இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடைசி கட்ட ஓவர்களில் (16 – 20) அதிக ரன்களை (82) கொடுத்த அணி என்ற மோசமான உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement